#TRENDINGCOURSES: எந்த COURSE-க்கு இப்போது மாணவ மாணவிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்??? எதிர்பாராத TWIST!!!
  • 19:23PM Apr 20,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 19:23PM Apr 20,2019 Chennai

தமிழகத்தில் உள்ள 91 GOVERNMENT ARTS & SCIENCE COLLEGE-கள், 139 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 518 தனியார் கல்லூரிகள், 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் உள்ளன. இதில் மொத்தம் 4 லட்சத்து 30 ஆயிரம் இடங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு மொத்த மதிப்பெண் 1,200 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 600 மதிப்பெண்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெற்றது. இனி வரக்கூடிய காலங்களிலும் இதே முறை தான் பின்பற்றப்பட இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை ARTS & SCIENCE COLLEGE-களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. தொடர் விடுமுறையை அடுத்து இன்று விண்ணப்ப வினியோகம் தொடர்ந்து வழங்கப்பட்டது.

ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இன்னும் 2 வாரங்களுக்கு மேல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்ட உள்ளது. இந்நிலையில், இந்த முறை ARTS & SCIENCE GROUP-களுக்கு வழக்கத்திற்கு அதிகமான மாணவர் சேர்க்கை இருப்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதும் TRENDING இருக்கும் COURSE-கள் தவிர்த்து, தற்போது B.COM., மற்றும் ENGINEERING-ற்கு மட்டுமே அதிக மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்த இடத்தில் இருப்பதென்னவோ, VISCOM படிப்புகள்தானாம். எப்படியோ, வாழ்க்கையின் தலைவாசலான COLLEGE-க்குச் செல்ல இருக்கும் அனைவருக்கும் MAYBEMAYNOT-ன் மனமார்ந்த வாழ்த்துகள்!!! 

Tamilnadu Top 10 Engineering Colleges.  |  Tamilnadu Top 10 Agri Colleges.  |  Tamilnadu Top 10 Law Colleges.  |  Best Polytechnics - Tamilnadu.  |  Top Universities in Tamilnadu.  |

Top