#chameleon skin: நினச்சா நம்மல கூட பச்சோந்தியா மாத்த முடியும் - மிரள வைக்கும் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு!
  • 17:08PM Oct 08,2019 United Kingdom
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 17:08PM Oct 08,2019 United Kingdom

சுற்றுப்புற சூழ்நிலைக்கேற்ப நிறம் மாறும் சிறப்பு தோல் ஒன்றை எமோரி பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பச்சோந்தியின் நிறம் மாறும் காணொலியை ஆய்வு செய்ததன் அடிப்படையில்  நெகிழ்வுத்தன்மை கொண்ட நீர் நிரம்பிய பாலிமரில் ஒளிவினை புரியும் படிகங்களை பதித்து இந்த தோல் வடிவமைக்கப்பட்டது. இதிலுள்ள ஹைட்ரோ ஜெல்லை விரித்தும் சுருக்கியும் படிகக்கற்றைகளுக்கிடையிலுள்ள இடைவெளியை மாற்றும்போது அவை பிரதிபலிக்கும் நிறங்களும் மாறுகின்றன. பச்சோந்தி தனது நிறத்தை மாற்றுவதைக் கவனித்ததால் இந்த கருத்து தனக்கு வந்ததாக இந்த ஆய்வின் ஆசிரியர் Yixiao Dong கூறுகிறார். பச்சோந்தியின் தோலில் உள்ள ஒளிவினை படிகங்கள் சுற்றுப்புறத்திற்கேற்ப அதன் தோற்றத்தை மாற்றிக்கொள்ள உதவுகின்றன.சில காலமாக விஞ்ஞானிகள் இதைப் போன்ற ஒளிவினைப் படிகங்களை உண்டாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

Artificial chameleon skin

#chameleon skin: camouflage, chemical sensing,கள்ள நோட்டு தடுப்பு ஆகிய துறைகளில் இது பயன்படும் என்கிறார்  இதன் முதுநிலை ஆய்வு ஆசிரியரும் எமோரி பல்கலைக் கழகத்துன் வேதியியல் பேராசிரியருமான Khalid Salaita.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top