Shoreline

பெற்றோர்கள் மூலம் நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் செய்யும் முடிவில் உள்ளவரா நீங்கள் ? அப்படியானால் அதற்கு முன் இந்த விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள் !

Apr 19 2021 09:59:00 AM

காதலித்து திருமணம் செய்வது இப்போது அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் இப்போது பெரும்பாலானவர்கள் மாறிவிட்டனர். இருந்தாலும் விதிவிலக்கு என்று சில கோஷ்டியை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இந்த காலத்திலும் காதலிக்காமல் வீட்டில் பார்க்கும் வரனை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் சில பொறுப்பான பிள்ளைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்யப்போகும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே சில விஷயங்களை பற்றி தெளிவாக புரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.

arranged-marriage-problems

காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் ஏற்கனவே அறிமுகமாகி பழகி இருப்பார்கள். ஒருவித இயல்பான புரிதல் அவைர்களிடையே இருக்கும். நிச்சயிக்கப்படும் திருமணங்களில் மணமகன் மற்றும் மணமகள் இருவருமே புதியதாக சந்தித்து கொள்வார்கள். நல்ல புரிதல் உண்டாவதற்கு சில காலம் தேவைப்படலாம்.  எப்போதும் ஒரு வரன் பார்த்த உடனே பிடித்து விடாது. ஏகப்பட்ட காரணிகளை தாண்டி வரவேண்டியிருக்கும். நமக்கு பிடித்த ஏற்ற வரன் அமைவதற்கு நீண்ட காலம் கூட ஆகும். அதனால் பொறுமை மிகவும் அவசியமாகும்.

arranged-marriage-problems

உங்களுடைய விருப்பம் எதிர்பார்ப்பு இவை மட்டும் முக்கியமல்ல. உங்களுக்கு வாழ்க்கைத்துணையாக வரப்போகும் நபரின் விருப்பமும் இதில் மிக முக்கியமாகும். காதலில் கூட யாருக்கும் அவர்களுடைய முதல் காதலே திருமணம் வரை சென்று முடிவதில்லை. நிச்சயிக்கப்பட்ட திருமணமும் அப்படித்தான். ஆணை பெண்ணுக்கு பிடிக்காமல் போகலாம். பெண்ணை ஆணுக்கு பிடிக்காமல் போகலாம். எனவே நிராகரிப்புகளை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. அதை நினைத்து வருத்தப்பட வேண்டிய அவசியமுமில்லை.

arranged-marriage-problems

உங்களது எதிர்பார்ப்புகளை பெற்றோரிடம் மட்டுமல்ல நீங்கள் வரன் பார்க்க போகும் இடத்திலும் தெளிவாக கூற வேண்டும். வரன் பார்த்து பேசும் நேரத்தில் ஆண் பெண் இருவரும் நேர்மையாகவும், கவனமாகவும், மரியாதைக்குரிய வகையிலும் பேசிக்கொள்ள வேண்டும். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ முதலில் உங்கள் எதிரில் இருப்பவரின் விருப்பத்தை தெரிந்து கொள்ள வேண்டும். திருமணமான பிறகு சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க திருமணத்திற்கு முன்பே ஒரு தெளிவான புரிதலுக்கு வருவது மிகவும் அவசியமாகும்.