Rainforest

அழகான தேவதை உங்களுக்கு உணவை ஊட்டிவிட்டால் நீங்கள் வேண்டாமென்று கூறி மறுப்பீர்களா? தேவதையின் கைப்பக்குவத்தை அனுபவிக்க நினைத்தால் இப்படி செய்யுங்க பாஸ்!

Jul 03 2021 11:07:00 AM

தேவதை வந்து ஊட்டிவிடுவதெல்லாம் கனவில் தான் நடக்கும். தேவதை தன்னுடைய கைகளால் உணவு தயாரித்து ஊட்டிவிட்டால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அபரிமிதமான சுவையை கொண்டுள்ள அரேபா என்ற உணவை பற்றித்தான் இன்று நாம் பேசவிருக்கிறோம். அரேபா என்ற பெயரைக்கேட்டு இது அரபு நாட்டு உணவு என்று நினைத்துவிட வேண்டாம்.

areba-food

அரேபா(Arepa) என்பது மக்காச்சோள மாவுகளால் ஆன ஒரு வகை உணவாகும். இது தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியிலிருந்து உருவானது என்று கூறுகின்றனர். இந்த உணவு கொலம்பியா மற்றும் வெனிசுலாவின் உணவுகளில் குறிப்பிடத்தக்கதாகும். பொலிவியா உள்ளிட்ட மற்ற தென் அமெரிக்க நாடுகளிலும் இந்த உணவு பிரபலமானதாக இருக்கிறது.

areba-food

தென் அமெரிக்க நாடுகளில் தினமும் மக்கள் விரும்பி உண்ணக்கூடிய உணவாக இந்த அரேபா இருக்கிறது. சீஸ், குவாஜாடா என்ற ஒருவகை தயிர், பல்வேறு இறைச்சிகள், கோழி, வெண்ணெய் போன்றவற்றுடன் சேர்த்து இதை பரிமாறுகின்றனர். சாண்ட்விச்கள் தயாரிக்கவும் இதைப் பயன்படுத்தலாம். இது மெக்சிகன் கோர்டிடா, சால்வடோரன் புபுசா, ஈக்வடார் டொர்டில்லா டி மாஸ் மற்றும் பனமேனிய டொர்டில்லா அல்லது சாங்கா போன்ற உணவு வகைகளை போல இருக்கிறது.

areba-food

அரேபாக்கள் பெரும்பாலும் வெண்ணெய் அல்லது சீஸ் நிரப்பப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்து பீன்ஸ், இறைச்சி, வெண்ணெய், முட்டை, தக்காளி, சாலட், இறால் அல்லது மீன் போன்ற பொருட்களின் கலவையுடன் சேர்த்து நிரப்பி அரேபாவானது தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது.

areba-food

அரேபாக்கள் வெளியில் மிருதுவாகவும் உள்ளே பஞ்சுபோன்றதாகவும் இருக்கும். அவை தெரு விற்பனையாளர்களுக்கான பிரபலமான உணவுப் பொருளாகும். ஆனால் அவை வீடுகளிலும் தயாரிக்கப்படுகின்றன. அரேபாக்கள் ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் சாப்பிடக்கூடிய மிகச்சிறந்த உணவாக இருக்கிறது.

areba-food

கொலம்பியாவில் வசிக்கும் நண்பர் ஒருவர் நீண்ட நாட்களுக்கு பிறகு வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசும்போது இந்த உணவைப்பற்றி என்னிடம் கூறினார். அதை முதன் முதலாக பார்க்கும்போது நிஜமாகவே தேவதையால் தயாரிக்கப்பட்ட உணவைப்போலவே இருந்தது. அந்த அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு இந்தப் பதிவில் அதைப்பற்றி தெரிவித்துள்ளேன. முடிந்தால் இதைப்பற்றிய குறிப்புகளை ஆராய்ந்து நீங்களும் சமைத்து சாப்பிட்டு பாருங்கள்.