விளம்பரங்களும், பெண்களும்…
  • 13:01PM Nov 01,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 13:01PM Nov 01,2017 Chennai, Tamil Nadu 600003, India

சமீபகாலமாய் வரும் விளம்பரங்களைப் பார்க்கும் போது இந்த மாதர் சங்கங்கள் எல்லாம் என்னதான் செய்து கொண்டிருக்கின்றது என்ற கேள்வியும், எப்பவுமே வித்தியாசமான கோணத்தில் சிந்தித்துக் கேள்வி எழுப்பும் பெண்கள் கூட ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்பது புரியாமல்தான் போகிறது.  ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் பவர் ஸ்டார் தோளில் கைபோட்டு இழுத்து, “உன்னைத்தான் கலாய்க்கிறாங்கன்னு கூடத் தெரியாம…” என்று வசனம் பேசியிருப்பார். அதுதான் நினைவுக்கு வந்தது.

ஏறத்தாழ அனைத்து விளம்பரங்களுமே அவர்களின் பொருளைப் பார்த்துத்தான் பெண்கள் மயங்குவதாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மூக்குக் கண்ணாடியிலிருந்து, கார் கம்பெனி வரை. இதில் சில பெர்ஃப்யூம் கம்பெனிகள் அவர்களின் பொருளைப் பயன்படுத்தும் ஆண்கள் மீது பெண்கள் விழுந்து. விழுந்து பழகுவதைப் போலக் காட்டியிருப்பார்கள். சமீபத்தில் மருமகளை முதலில் சந்திக்கும் மாமியார் சொல்லும் டயலாக் – கொஞ்சம் ஓவர்தான்.  எந்த வயதானாலும் இவர்களின் பொருட்கள் பெண்களை இச்சை கொள்ளச் செய்யும் என்பது என்ன விதமான சிந்தனை.

இது ஆண்கள் பொருட்கள் என்றால் பரவாயில்லை. பெண்கள் பொருட்களில் பெண் எப்பொழுது பார்த்தாலும் பரு, தலைமுடி, மேக்கப் சிந்தனையிலேயே இருப்பதாகக் காட்டுகிறார்கள். சாதாரணமாக மதுவை நேரடியாக விளம்பரங்களில் காட்டக் கூடாது என்பதால் எவ்வளவு சாமர்த்தியமாக, வெறும் பெயரை மட்டுமே குறிப்பிட்டு மது வகைகள் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால். இந்த நாப்கினும். டயாபரும் படும்பாடு சொல்லி மாளாது. பெண்கள் அனைவருக்குமே சம்பந்தப்பட்ட பொருள் என்னவென்று தெரியும். ஆனாலும், அதற்குப் படம் போட்டுக் காட்டி, கத்திரியால் வெட்டி – இந்த அழகில் வீட்டில் குழந்தைகளுடன் படம் பார்த்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களின் கதி…

இதற்கு அடுத்த கதையாக, என்னதான் வாஷிங்மெஷின் இருந்தாலும் இன்னமும் கையாலேயே துவைக்கும் பெண்கள், டாய்லெட் க்ளீனர்களுக்காக பந்தயம் கட்டும் பெண்கள், மாமியார் மருமகள் கொடுமை விளம்பரங்கள் என்று ஒன்றுக்கொன்று சளைக்காமல் பெண்களை கலாய்த்துக் கொண்டுதான் இருக்கிறது.  வெறும் 3 சதவீத விளம்பரங்கள்தான் பெண்களுக்கு உண்மையான மரியாதையுடன் பொருட்களை முன்னிலைப்படுத்துகிறார்கள்.  ஏற்கெனவே சீரியல்கள் முன் அமரும் தாய்களால் வன்மம், குரோதம் என அனைத்தையும் குழந்தைகள் கற்றுக் கொண்டுவிடுகிறார்கள்… குறைந்தபட்சம் நடுவில் வரும் இடைவெளியையாவது ஆரோக்கியமாக வைப்போமே!!! 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top