Misc

ஒரு ஸ்மார்ட் வாட்ச் மனுசனின் உ யிரை காப்பாத்தி இருக்குன்னு சொன்னா நம்புவீங்களா? அறிவியல் வளர்ச்சியை சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மை கிடைக்குமா!

Oct 05 2021 11:38:00 AM

இந்த உலகம் அறிவியல்  தொழில்நுட்ப அளவில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. இதை சில மக்கள் மட்டுமே முறையாக பயன்படுத்துகிறார்கள். எல்லாருமே கையில் போனை வச்சுக்கிட்டு வெட்டித்தனமாகத்தான் உபயோகப்படுத்துகிறார்கள். அந்த மொபைல் போனை வைத்து பல லட்சங்கள் சம்பாத்திக்கும் மக்களும் நம்ம ஊரில் இருக்கத்தான் செய்யுறாங்க. ஒரு ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் ஒரு மனிதனின் உ யிரை காப்பாற்றியுள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா?

apple watch saved life singapore

உண்மையாகவே ஒரு ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் ஒருவரின் உ யிரை காப்பாற்றியுள்ளது. ஸ்மார்ட் வாட்ச் என்றால் சும்மா நேரம் பார்க்க, மெசேஜ் பார்க்க என்று நாம் நினைத்துக்கொண்டுள்ளோம். சிங்கப்பூரில் முகமது பிட்ரி என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஆம்னி வேன் ஒன்று எதிர்பாராத விதமாக இவர் மீது மோதிவிட்டது. வி பத்து நடந்த போது இவர் கையில் கட்டி இருந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சேதமாகிவிட்டது.

apple watch saved life singapore

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சில் ஒரு ஆப்சன் இருக்கு, அதாவது நமக்கு வி பத்து ஏற்படும்போது நாம் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சில் உள்ள ஒரு பட்டனை அழுத்தினால் உடனே அருகில் உள்ள ஆம்புலன்ஸ் சேவைக்கு மெசேஜ் சென்றுவிடும். ஆனால் முகமது கட்ரி எந்த பட்டனையும் அழுத்தவில்லை. ஸ்மார்ட் வாட்ச்சே ஆ பத்தில் சிக்கியதால் அந்த ஸ்மார்ட் வாட்சில் இருந்து ஆம்புலன்ஸ் சேவைக்கு மெசேஜ் சென்றுவிட்டது.

apple watch saved life singapore

உடனே அருகில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனம் வந்து மகமது கட்ரி உ யிரை காப்பாற்றியது. சில மணி நேரங்களுக்கு பிறகு தான் இந்த ஸ்மார்ட் வாட்சில் இருந்து மெசேஜ் சென்று இவர் காப்பாற்றப்பட்டார் என்பது அவருக்கு தெரிந்துள்ளது. நாம் அறிவியல் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தினால் பல வகையான நன்மைகளை பெற முடியும் என்பது இந்த நிகழ்வில் இருந்து தெளிவாகிறது.

apple watch saved life singapore