#AnithaSampath ஆறு மணி அழகி அனிதா சம்பத்தின் அழகிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்!
  • 17:59PM May 22,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:59PM May 22,2019 Chennai

கடந்த வருடம் பிரியா வாரியார், ஜானு என ஏகப்பட்ட பெண்கள் தமிழக இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தனர், அதில் மிகமுக்கியமானவர் செய்தி தொகுப்பாளினி அனிதா சம்பத். அதுவரை குற்றம், அரசியலை மட்டும் காட்டிவந்த சன் டிவி செய்திகள் கடந்த வருடம் இந்தக் குட்டி தேவதையைத் தமிழக இளைஞர்களுக்கு அறிமுகம் செய்தது. இதற்கு முன்பும் இவர் செய்தியாளராகப் பணியாற்றியிருந்தாலும் சன் டிவி செய்திகள் மூலம் பெரும் பிரபலம் அடைந்தார். இவரைப் பார்ப்பதறகாகவே பல இளைஞர்கள் தொலைக்காட்சி செய்திகள் பார்க்க தொடங்கினார்கள், இவருக்கென்று ஒரு ஆர்மியும் உருவாகியது. இவரைப் பற்றிய சில தகவல்களை இங்குப் பார்ப்போம்.

Little Angel 

அனிதா சம்பத் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இன்ஜினியரிங் முடித்தவர். ஆரம்பத்தில் வேலை செய்துவந்த இவர், பின்பு தொலைக்காட்சி உலகத்திற்குக் காலடி எடுத்துவைத்துள்ளார்.

Stylish Thamizhachi

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anitha Sampath (@official_anithasampath) on

சன் செய்திகளுக்கு முன்பு, இவர் நியூஸ் 7 செய்திகளில் தொகுப்பாளினியாகப் பணியாற்றியுள்ளார். ஆனால் இவர் பிரபலம் அடைந்தது, சன் செய்திகள் மூலம் தான்! சாதாரணமாக ஷேர் செய்யப்பட்ட மீம் மூலமாக ஒரே இரவில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்குக் கனவுக்கன்னியாக மாறிவிட்டார்.

Vanakkam Thamizha!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anitha Sampath (@official_anithasampath) on

இந்தப் பிரபலத்திற்குப் பிறகு இவரைத் திரைப்படங்களில் வரும் செய்தி தொகுப்பாளினி கதாபாத்திரத்துக்கும் இவரையே அழைத்தனர். 2.0, சர்க்கார், சூர்யாவின் காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Anchoring&Life

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anitha Sampath (@official_anithasampath) on

சன் செய்திகள் மட்டுமின்றி, காலையில் ஒளிபரப்பாகும் "வணக்கம் தமிழா" நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக உள்ளார். சமூகவலைத்தளங்களில் இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் சமுதாயப்பிரச்சனை போன்றவற்றைப் பகிர்ந்து வருகிறார்.

Where It'll Started!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anitha Sampath (@official_anithasampath) on

இவர் தனது மேக்அப் இல்லாத புகைப்படம் ஒன்றை இணையத்தில் ஷேர் செய்தார், ஆனால் அது சிலரது எதிர்மறை கமெண்டுக்கு ஆளானது. இதைப்பற்றி அனிதா கூறுகையில், எனது மேக்அப் செய்து அழகாக இருப்பதை விட எனக்குப் பிடித்தது போல இருப்பதே எனக்கு அழகாக உள்ளது என்று தெரிவித்தார். இவரது இந்த விளக்கம் பலரால் பாராட்டப்பட்டது.

Top