#HologramCircus சர்க்கஸ் கொடுமையில் இருந்து வனவிலங்குகளைக் காப்பாற்ற ஜெர்மன் நிறுவனத்தின் புதுமுயற்சி!
  • 17:19PM Jun 06,2019 Germany
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:19PM Jun 06,2019 Germany

காட்டில் கம்பிரமாகச் சுற்றிவந்த சிங்கத்தைக் கொடூரமாக அடைத்து மிரட்டி கொண்டுவந்து மனிதர்களின் பொழுதுபோக்குக்காக "சர்க்கஸ்" என்ற பெயரில் வீட்டில் இருக்கும் பூனை போல விளையாட வைக்கிறார்கள். இன்றுவரையில் உலகின் முக்கியமான நாடுகளில் மிருகங்களை வைத்து நடக்கும் சர்க்கஸ் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கடந்த மாதம் கூடத் தாய்லாந்து நாட்டில் பொழுதுபோக்குப் பூங்காவில் பயன்படுத்தப்பட்ட யானை குட்டி ஒன்று மயங்கி விழும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது. மிருகநல காப்பகத்தினர் சிலரின் முயற்சிகளால் ஐரோப்பிய அமெரிக்கா நாடுகளில் சர்க்கஸ் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜெர்மன் நாட்டில் மிருகங்களுக்குப் பதிலாக Hologram தொழில்நுட்பம் மூலம் புதுவிதமான சர்க்கஸ் நிகழ்ச்சியை அறிமுகம் செய்துள்ளனர். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த Circus Roncalli என்ற சர்க்கஸ் நிறுவனம் கடந்த 1976-ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் புகழ்பெற்ற இந்தச் சர்க்கஸ் நிறுவனம் தற்போது வன விலங்குகளைச் சர்க்கஸ் நிகழ்ச்சிக்காகப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு Hologram தொழில்நுட்பம் மூலம் சுமார் 16 அடி உயரம் கொண்ட 105 நீள திரையில் யானை, குதிரை, சிங்கம் போன்ற விலங்குகள் வித்தை காட்டுவது போல வடிவமைத்து நிகழ்ச்சி நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சியைப் பார்க்க ஏரளமான மக்கள் ஆவலுடன் வருகின்றனர். மிருகங்களைக் கொடுமை செய்து சர்க்கஸ் நடத்துவதைத் தவிர்த்து இப்படிப் புதுமையான முறையில் ஈடுபட்டிருக்கும் Circus Roncalli நிறுவனத்தை ஐரோப்பிய நாடு மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Top