விடுப்பே எடுக்காத ஊழியருக்குக் கோடிக்கணக்கில் பணிக்கொடை கொடுத்த நிறுவனம்!
  • 17:06PM Feb 07,2019 Mumbai
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 17:06PM Feb 07,2019 Mumbai

தனது 52 வருடப் பணிக்காலத்தில், இதுவரை ஒருமுறை கூட விடுப்பெடுக்காத L&T நிறுவன நிர்வாக தலைவருக்கு அந்த நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத ஊதிய தொகையை வழங்கியுள்ளது. L&T நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக தலைவராக இருந்த அனில் மணிபாய் நாயக் 1965-ம் ஆண்டு இளநிலை பொறியாளராக அங்கு வேலைக்குச் சேர்ந்தார். தனது நேர்மையான உழைப்பால் படிப்படியாக உயர்ந்து கடந்த 2003-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் நிர்வாக தலைவராக பொறுப்பேற்றார். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இவரது 52 வருடப் பணிக்காலத்தில் ஒருமுறை கூட சோர்வு காரணமாகவோ, தனது தனிப்பட்ட வேலைக்காகவோ இவர் விடுப்பே எடுக்கவில்லை.

Related image

L&T நிறுவனத்திற்காக அயராது உழைத்த இவரைப் பாராட்டும் விதமாகக் கடந்த 2017-ம் ஆண்டு இவர் பணி ஓய்வு பெற்றபோது, பணிக்கொடையாக 55 கோடி கொடுத்துள்ளனர், மேலும் இவர் விடுப்பெடுக்காத அந்த நாட்களுக்கு ஊதியமாக 21 கோடி கொடுத்துள்ளனர். இவருக்கு மாத ஓய்வூதியம் மட்டும், ஒன்றாரை கோடி வழங்கப்படுகிறது. ஆனால் நாயக் இவரது வருவாயில் 75% சதவீதத்தை அவரின் Naik Charitable Trust மற்றும் Nirali Memorial Medical Trust-ற்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இவர் நாட்டின் உயரிய விருதான பத்ம பூசண் மற்றும் பத்ம விபூசண் விருதுகளைப் பெற்றுள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top