Misc

தேவையில்லாத இந்த செயலை நீங்கள் தவிர்க்கவில்லை என்றால் உங்களுடைய வாழ்க்கை அவ்வளவு தான்!

May 03 2021 11:54:00 AM

நமக்கு பிடிக்காத செயல் ஏதாவது நம் நண்பர்களோ, குடும்ப உறுப்பினர்களோ செய்தால் நமக்கு கோபம் வருவது இயல்பு தான். ஆனால் அந்த கோபம் 5 நிமிடத்தில் காணாமல் போய்விட்டால் பிரச்சனையில்லை. மாறாக கோபப்பட்டு மணிக்கணக்கில் சண்டையிட்டோம் என்றால் அது நம்முடைய உடல்நலத்திற்கு தேவையில்லாத தீங்கு விளைவிக்கும்.

anger-danger

அடிக்கடி கோபப்படுவதால் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு இதய பிரச்சனைகள் வரும். நீங்கள் கோபப்பட்டு பேசி இரண்டு மணி  நேரத்திற்கு பிறகு உங்களுக்கு நெஞ்சு வலி, மாரடைப்பு, சீரற்ற இதயத்துடிப்பு போன்ற பிரச்சனைகள் வருவதற்கு இரண்டு மடங்கு அதிகமாக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நமக்கு மிகப்பெரிய எதிரியே நம்முடைய கோபம் தான். அது நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். ஒரு நிமிட கோபம் கூட உங்கள் நோய் எதிர்ப்பு திறனை 4 முதல் 5 மணி நேரத்திற்கு குறைக்கும் திறனுடையது.

anger-danger

அதிக கோபம் காரணமாக நுரையீரல் மற்றும் சுவாச கோளாறுகள் உண்டாகும். இது மட்டுமல்லாது தலைவலி, வயிற்று வலி, தூக்கமின்மை, கவலை, உயர் இரத்த அழுத்தம் போன்றவையும் ஏற்படும். கோபம் ஏற்பட முக்கிய காரணம் மனச்சோர்வு அல்லது மனவிரக்தி. இதன் காரணமாக உணர்ச்சிவசப்பட்டு தான் மனிதர்கள் கொலை, கொள்ளை போன்ற தீய செயல் செய்வதற்கு தூண்டப்படுகின்றனர். கோபத்தை கையாள்வதற்கான சிறந்த வழி தியானம், யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதாகும். இதன் மூலம் மன அமைதி உண்டாகி கோபமான சூழல்களில் உங்கள் மனதை கட்டுப்படுத்த முடியும்.