#Abhay : பெண்கள் இரவில் தனியாக சிக்கிக்கொண்டால் என்ன செய்வது? 10 நிமிடங்களில் காத்திருக்கும் ஆச்சர்யம்!
  • 12:57PM Dec 06,2019 Andhra Pradesh
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 12:57PM Dec 06,2019 Andhra Pradesh

இன்னைக்கு ஹைதராபாத் விவகாரம் நாடு முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எந்த இடத்தில் பெண் டாக்டரை நான்கு பேர் சேர்ந்து கற்பழித்து கொன்றனரோ, அதே இடத்தில் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பாலியல் சீண்டலுக்கும் இதுபோல தண்டனை கொடுத்தால் தான், தப்பு செய்து கொண்டிருப்பவர்கள் கூட பயத்திலாவது சீக்கிரம் திருந்துவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாக பெண்கள் இரவில் தனியாக செல்லும் போதும், புது இடத்திற்கு வழி தெரியாமல் செல்லும் போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்று சிக்கிக்கொள்வதாலும் தான் பெரும்பாலான இடங்களில் பாலியல் சீண்டல் அத்துமீறி போகிறது. அங்கு காப்பாற்ற யாரும் வரப்போவதில்லை என்று தெரிந்தே, காமகொடூரன்கள் கொலை செய்யும் நிலை வரை செல்கின்றனர். தங்களுடைய அடையாளம் பாதிக்கப்பட்ட பெண் மூலமாக வெளியே தெரிந்து விடக்கூடாது என்று உடலை எரிக்கும் அளவுக்கு வக்கிரம் குணம் கொண்டவர்களாக உள்ளனர்.

அவர்களை போன்றவர்களிடம் இருந்து பெண்களை காக்க ஆந்திர அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. அதற்கு Abhay என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு பெண் இரவில் தனியாக சிக்கிக்கொண்டால், பெண் நிற்கும் இடத்திற்கே வந்து அழைத்துச்சென்று வீட்டில் விட்டு விட முடிவு செய்துள்ளது காவல்துறை. இதற்காக ரோந்து வாகனங்களும், இரு சக்கர வாகனங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. 100 என்ற அவசர் எண்ணிற்கு கால் வந்தவுடன் பத்து நிமிடங்களில் காவல் துறை வாகனம் பெண் முன்னால் வந்து நிற்கும்.

இதில் எந்த குளறுபடியும் வந்துவிடக்கூடாது என்று ஒவ்வொரு வாகனத்திலும் பெண் காவலர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண் காவலரின் உடையில் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இரவு 9 மணிக்கு ஆரம்பித்து காலை 5 மணி வரை இந்த பாதுகாப்பு சேவை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள், பயிற்சி மையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உட்பட பல இடங்கள் பாதுகாப்பற்ற இடங்களாக வகைபடுத்தப்பட்டுள்ளன. | sos: நாலு பேர் சேர்ந்து கேங் ரேப் பண்ண வந்தா என்ன பண்றது? இந்த விஷயம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் சொல்லுங்க!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top