Shoreline

அண்டார்டிகா கண்டத்தில் என்னதான் நடக்குது? பனிப்படலங்களால் உலகிற்கு ஏற்படப்போகும் மிகப்பெரிய ஆ பத்து!

Apr 19 2021 04:32:00 PM

உலகில் உள்ள ஏழு கண்டங்களில் அண்டார்டிகா கண்டமும் ஒன்று. இங்கே முழுவதும் பனிப்பாறைகளால் சூழப்பட்டுள்ளது. மனிதர்கள் இங்கே வாழ்வது மிகவும் க டினம். அந்த அளவுக்கு இங்கே குளிர் நம்மை வாட்டி வதக்கிவிடும். இங்கே ஒரு சில அறிவியல் ஆய்வாளர்கள் மட்டும் சென்று ஆராய்ச்சி செய்கிறார்கள்.

antartica pani padalam water

அண்டார்டிகாவில் அதிக அளவு பனிப்பாறைகளும், பனிப்படலங்களும் காணப்படுகின்றன. கடந்த சில வருடங்களாக உலகின் வெப்பநிலை அதிகரித்து வருவதால் இங்குள்ள பனிப்படலங்கள் உருக ஆரம்பித்துவிட்டன. நம் உலகின் வெப்பநிலை இன்னும் நான்கு டிகிரி மட்டும் அதிகரித்தால் அண்டார்டிகாவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பனிப்படலங்கள் உருகிவிடும்.

antartica pani padalam water

ஒரு வேலை பனிப்படலங்களும், பனிப்பாறைகளும் உருகிவிட்டால் கடல் மட்டும் ஒரு மீட்டர் உயரம் வரை அதிகரிக்கும். உருகும் அனைத்து படலங்களும் கடலில் தான் கலக்கும். ஒரு மீட்டர் உயரம் வரை கடல் மட்டம் அதிகமாகும் பட்சத்தில் நிறைய நாடுகள் கடலில் முழுகும் நிலை உருவாகும். உலக வெப்பமயமாதல் தடுக்கப்படாவிட்டால் கடல் மட்டம் உயர்வதை யாராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை.

antartica pani padalam water