அமெரிக்க இளைஞரை கொன்ற அந்தமான் பழங்குடியினர் !!
  • 12:05PM Nov 22,2018 Andaman and Nicobar Islands
  • Written By AR
  • Written By AR
  • 12:05PM Nov 22,2018 Andaman and Nicobar Islands

அமெரிக்க இளைஞர் ஒருவர் அந்தமான் பகுதியில் உள்ள பழங்குடியினர் தீவிற்கு சுற்றி பார்க்க சென்ற அவரை அந்த பழங்குடியினர் கொலை செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

http://cms-img.puthiyathalaimurai.com/uploads/common/2018/11/22/083805_andaman3_800x400.jpgசுற்றுலா பயணியாக வந்த அமெரிக்க இளைஞர் ஜான் அந்தமான் பகுதியை சுற்றி பார்த்துள்ளார். அதேபோல் கான்டினால் தீவிற்கு சென்று சுற்றி பார்க்க வேண்டும் என்பதற்காக அந்தமான் மீனவர்கள் மூலம் அங்கு சென்றுள்ளார்.  ஆனால் அந்த தீவில் வசிப்பவர்கள் வெளியாட்களுடன் பழக்கம் இல்லாமல் பழைய நாகரிகத்துடன் வாழ்ந்து வருகின்றார். அப்பகுதிக்கு செல்ல இந்திய அரசு தடை விதித்துள்ளது. ஆவனபடங்கள் கூட எடுக்ககூடாது. அம்மனிதர்கள் மற்றவர்களை பார்த்தால் வில் அம்ம்பு கொண்டு தாக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.

Top