Exquisite

இதெல்லாம் நினைவு இருக்கிறதா? நாம் தொலைத்தது தான்..!!

Apr 09 2018

பல்லாங்குழி, பம்பரம், பச்சை குதிரை இதையெல்லாம் விளையாடிய கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம். இப்போது உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தையை வெளியே எங்கே விளையாட விடுகிறார்கள். குழந்தைகளும் லேட்டஸ்ட் வீடியோ கேம்களை வாங்கிவைத்து கொண்டு வீட்டிலே விளையாடி கொண்டிருக்கிறார்கள்.மண்ணில் விளையாடியதாலோ வெயிலில் சுற்றி திரிந்ததாலோ என்னவோ இன்றும் நம்மால் இந்த கோடையை தாக்குபிடிக்க முடிகிறது.இப்போதெல்லாம் எந்த குழந்தைகள் வெயிலில் விளையாட செல்கிறது.
 
மாலை 6 மணி ஆனாலே போதும் ஆசிரியர் கொடுத்த வீட்டு பாடத்தையெல்லாம் முடித்துவிட்டு கூட்டம் கூட்டமாக விளையாட கிளம்பினோம்.அம்மா வந்து சாப்பிட வா என்று அழைத்தால் மட்டுமே வீட்டிற்கு போக தோன்றும்.மீண்டும் எப்போது விளையாடுவோம் எப்போது லீவ் விடுவாங்க என்று எதிர்பார்த்த நாட்கள் ஏராளம்
 
இப்போது எந்த குழந்தை மகிழ்ச்சியாக தன்னுடைய குழந்தை பருவத்தை கடக்கிறது.எட்டு வயதிலே அந்த க்ளாஸ் இந்த க்ளாஸ் என அவனது எதிர்காலத்திற்கான விதையை போடுகிறோம் என்று கூறி விட்டு நிகழ்காலத்து பசுமையை பறிக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
முன்பெல்லாம் வீட்டில் திருமணம் என்றால் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே சொந்தங்கள் கூடி இருக்கும்.இப்போது என்ன நடக்கிறது நெருங்கிய உறவுகளே இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் வருகிறார்கள்.
 
 
ஏன் உங்க பசங்க வரவில்லை என்றால் ஸ்கூல் இருக்கு அவன் பாட்டியை பார்த்துக்க சொல்லியிருக்கேன் என காரணம் சொல்லும் நபர்களையும் நாம் பார்த்திருப்போம்.உறவினர்களிடத்தே பேசும் போதும் பழகும் போதும் தான்  இத்தனை விதமான மனிதர்கள் இருக்கின்றனர் என்பதும் ஒரு இடத்தில் எப்படி பேசுவது, சங்கடமான சூழ்நிலையையும் எப்படி சாதகமாக மாற்றி கொள்வது என பல நிலைகளை கற்று கொள்ள நேரிடுகிறது
 
ஒரு நாள் விடுப்பு எடுத்தால் ஒன்றும் ஆகாது.இத்தனை விஷயங்களும் அந்த ஒரு நாளில் பள்ளி கற்று கொடுத்துவிடுமா?
தொழில்நுட்பம் வளர வளர நாம் பழமைகளை மறந்துவருகிறோம். இந்த அவரச  உலகில் இது போன்று நாம் மறந்த சின்ன சின்ன அழகான விஷயங்கள் ஏராளம்.அவற்றில் சில உங்களுக்காக.