#ElectionResults2019 மாம்பழத்தை Maaza போட்ட தர்மபுரி மக்கள்! பாகுபலிக்கு வந்த சோதனை!
  • 17:20PM May 23,2019 Chennai
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 17:20PM May 23,2019 Chennai

தமிழகத்தில் மற்ற தொகுதிகளைக் காட்டிலும் தருமபுரி தொகுதியின் தேர்தல் முடிவு மட்டுமே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மாற்றம் முன்னேற்றம் என்று கூறிய அன்புமணி ராமதாஸுக்கும் திமுகவை சேர்ந்த செந்தில் குமாருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதிமுகக் கூட்டணியில் போட்டியிட்ட தொகுதியை கைப்பற்றி வெற்றிவாகை சூடிக்கொள்ளும் வேட்பளராக அன்புமணி ராமதாஸ் கருதப்பட்டார், ஆனால் தேர்தல் முடிவு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இப்போதுவரையில் திமுக 37 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 1 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதில் இன்று காலை வரை தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் தான் முன்னிலையில் இருந்தார், ஆனால் மதியம் தாண்டியதும் திமுகவை சேர்ந்த செந்தில் குமார் முன்னிலை வகிக்கத் தொடங்கினர். எப்படியும் அன்புமணி ராமதாஸ் முன்னிலை பிடித்துவிடுவார் என்று கருதிய வேலையில் அவரை அசால்ட்டாகச் செந்தில் குமார் முந்திவிட்டார்.

கடந்தமுறை இதே தொகுதியில் அட்டகாசமான வெற்றியை பெற்றார் அன்புமணி, ஆனால் இம்முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஐயோ பாவமாக அவரது சொந்த தொகுதியில் கோட்டைவிட்டுவிட்டார். திமுகவின் இந்த வெற்றியை திமுகத் தொண்டர்கள் மாம்பழத்தை நசுக்கி ஜூஸ் பிழிந்து கொண்டாடி வருகின்றனர்.

Top