Misc

எழுபது வருடங்களாக சைவம் மட்டுமே சாப்பிடும் முதலை! கோவில் பிரசாதத்தை ரெண்டு வேலை உணவாக சாப்பிடும் அதிசய முதலை!

Oct 06 2021 06:08:00 PM

கேரளாவில் அனந்த பத்மநாப ஆலயம் ஒன்று காசர்கோடு பகுதியில் உள்ளது. இந்த ஆலயம் ஒரு ஏரிக்குள் அமைந்துள்ளது. இந்த ஏரியில் 70 வயது மதிக்கத்தக்க முதலை ஒன்று வாழ்ந்து வருகிறது. இந்த முதலையை இங்கு வாழும் மக்கள் கடவுளின் தூதராகவே பார்க்கிறார்கள். பல வருடங்களாக இந்த முதலைக்கு சந்திரசேகர் என்பவர் தினமும் ரெண்டு வேலை அரிசியால் செய்த உணவை ஊட்டி விடுகிறார்.

kerala crocodile lake temple

இதெல்லாம் சொன்னா நம்புற மாதிரியா இருக்கு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையாகவே இந்த கோவிலில் உள்ள முதலை யாரையும் தொந்தரவு செய்யாதாம். சில நேரங்களில் நேராக கடவுளின் மூலவர் சிலைக்கு அருகில் வந்து சிறிது நேரம் இருந்துவிட்டு செல்லுமாம். தினமும் காலை 8 மணிக்கு அதே போல பகலில் ஒருமுறை மற்றும் இரவில் ஒருமுறை சந்திரசேகர் இந்த முதலைக்கு அரிசியால் செய்த உணவை ஊட்டி விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

kerala crocodile lake temple

இவர் உணவு ஊட்டிவிடுவதை பார்ப்பதற்காக தினமும் அங்கே கூட்டம் கூடிவிடும். நமக்கு தெரிந்து முதலை என்றால் மான், நரி, சிங்கம், யானை போன்ற விலங்குகளை வே ட்டையாடும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கடவுளின் தூதரான இந்த முதலை வெறும் சைவம் மட்டும் தான் சாப்பிடும். இந்த ஏரியில் உள்ள மீன்களை கூட எந்த தொந்தரவும் செய்யாமல் இருக்கும் என்று இங்கு வாழும் மக்களும், அர்ச்சகர்களும் சொல்கிறார்கள். இந்த முதலையை பெயர் பாபியா. உண்மையில் இந்த விஷயம் இங்கு சென்று தரிசனம் செய்யும் எல்லா மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

kerala crocodile lake temple