Misc

முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? நண்பரின் கனவில் தோன்றிய அதிசயம்!

Oct 07 2021 01:19:00 PM

நண்பர் ஒருவர் கடவுள் பக்தி இல்லாதவர். கோவிலுக்கு போய் சாமி கும்பிடுவது, அம்மாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுப்பது போன்றவற்றில் சுத்தமாக நம்பிக்கை இல்லாதவர். அதுபோன்ற நாட்களில் அனாதை ஆசிரமங்களுக்கு சென்று அங்கு உள்ள மக்களுக்கு உணவு வாங்கித் தருவதை வழக்கமாக வைத்திருந்தார். நண்பர்கள் நாங்க எவ்வளவோ சொல்லியும் கடவுள் பக்தி மற்றும் திதி கொடுப்பது பற்றி கண்டுகொள்ளமாட்டார்.

ammavasai tharpanam thithi life change

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அவருடைய தந்தை ஒரு வி பத்தில் இ றந்துவிட்டார். அவருடைய தந்தை இ றந்து சரியாக 27ஆம் நாள் அவருடைய கனவில் வந்திருக்கிறார். திடீரென தந்தை இவருடன் இருப்பதை போல கனவு வந்ததும் நண்பர் ரொம்ப சந்தோஷமாகி விட்டார். மகனே நீ நம்முடைய முன்னோர்கள் எல்லாரையும் எப்பவும் நினைச்சு பார்க்கணும்.

ammavasai tharpanam thithi life change

நீ எங்க எல்லாருக்கும் அம்மாவாசை தினத்தில் கொடுக்கும் தர்ப்பணம் தான் எங்கள் உணவே. அப்போ நீ எங்களுக்கு கொடுக்கும் எள் மற்றும் சாதம் தான் எங்களின் ஆசையை நிறைவேற்றும். எப்படி நீ உன்னுடைய முன்னோர்களை நினைத்து பார்க்கிறாயோ அப்படி தான் உன்னுடைய வாழ்க்கையும் அமையும் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.

ammavasai tharpanam thithi life change

நண்பருக்கு இன்னும் கொஞ்ச நேரம் தன்னுடைய தந்தையுடன் பேச வேண்டும் என்று விருப்பம், இருந்தாலும் கனவு அப்போதே முடிந்துவிட்டது. அன்று முதல் நண்பர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அவருக்கு கடவுள் நம்பிக்கை வந்துவிட்டது என்று சொல்வதை விட தன்னுடைய தந்தையின் விருப்பத்திற்காக இன்றுவரை தர்ப்பணம், திதி கொடுத்து வருகிறார். முன்பு இருந்ததை விட இப்போது அவருடைய வாழ்க்கை சிறப்பாகவே உள்ளது. ஆனால் இப்பவும் அனாதை ஆசிரமத்திற்கு சென்று எப்பவும் போல உணவு வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ammavasai tharpanam thithi life change