அம்மா ஸ்கூட்டி : அடுத்த அசத்தல் வாய்ப்பு..? படைதிரளும் பெண்கள் கூட்டம் - இந்த ஆண்டிற்கான ஜாக்பாட்.!
  • 12:52PM Jan 11,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 12:52PM Jan 11,2019 Tamil Nadu

your image

 

அம்மா இருசக்கர வாகனதிட்டத்தின் கீழ் மானியம் பெற 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஊடகங்களுக்கு செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழக அரசு பெண்களுக்கு மானிய விலையில்இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் பெண்கள் 2018-19 நிதியாண்டிற்கான மானியம் பெற வருகின்ற 21ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.

இந்ததிட்டத்தின் கீழ், அதிகபட்சமாக வாகனத்தின் விலையில்50 விழுக்காடு அல்லது ரூ. 25,000 இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும். மாற்றுத்திறனாளி களுக்கு பொருத்தப்பட்ட கூடுதல் சக்கரங்கள் உடையவாகனத்திற்கு மானியத் தொகை அதிகபட்சமாக ரூ. 31 ஆயிரத்து 250 அல்லது வாகனத்தின் விலையில் 50 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அந்தத்தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் மானியம் பெற விரும்பும் பெண்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து சொந்தமுதலீடு அல்லது வங்கிக்கடன் பெற்று இருசக்கர வாகனம் வாங்க வேண்டும்.மேலும் தமிழகத்தில் வசிப்பவராகவும், 18 முதல்40 வயது வரை உள்ளவராகவும், ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50ஆயிரத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் மண்டல அலுவலகங்களில் நேரிலோ, பதிவுஅல்லது விரைவு தபால்மூலமாகவோ விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்' என்று கூறப்பட்டுள்ளது.

Share This Story

You Might Also Like These
Related Stories
Top