Highrise

இனி ஏ.சி எல்லாம் தேவைப்படாது போலிருக்கே! வாழ்க்கையை ஈசியாக்கிய அமெரிக்க வல்லுநர்கள்!

Sep 27 2021 11:04:00 AM

உலகின் மிகச்சிறந்த வல்லரசு நாடான அமெரிக்காவில் அறிவியல் வல்லுநர்கள் ஒரு சிறந்த கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார்களாம். அது என்னவென்றால் புவி வெப்பமாவதை குறைக்கும் நோக்கத்தில், AC-க்கு மாறாக வீடுகளுக்கு அடிக்கப்படும் பெயிண்ட் தான். இதிலென்ன பிரமாதம் இருக்கிறது என்கிறீர்களா? விஷயம் இல்லாமலா இது கின்னஸ் சாதனை படைத்து இருக்கும். வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

white-paint prevent-sun-light

அமெரிக்காவில் பர்டியூ பல்கலைக்கழக ஆய்வுக் கூடத்தில் பணியாற்றிவரும் அறிவியலாளர்களின் ஆராய்ச்சிகள் மிகவும் வித்தியாசமானதாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக சுற்றுசூழல் தொடர்பாக அவர்கள் புதுப்புது கண்டுபிடிப்புகளை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது தான் இந்த பெயிண்ட். அடர் வெள்ளை நிறத்தில் இருக்கும் இது சூரிய கதிர்வீச்சுகளை பிரதிபலிக்கும் திறன் கொண்டதாம்.

white-paint prevent-sun-light

அதாவது 90 முதல் 98 சதவீத சூரிய கதிர்வீச்சுகளை பிரதிபலிப்பதோடு, மிகவும் குறைந்த அளவிலான கதிர்வீச்சுகளை உள்ளே அனுமதிக்கும் திறன் கொண்டுள்ளதாக அதனை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளார்களாம். இதன் காரணமாக, வீடுகளுக்குள் குறைந்த அளவு வெப்பமே அனுமதிக்கப்படுகிறது. இதனால் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் AC இல்லாமல் நமது வீடுகளை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர்

white-paint prevent-sun-light

இதனை அடிக்கும் பட்சத்தில், எந்தவொரு கட்டிடமும் இயற்கையாகவே குளிர்ச்சியை பெறமுடியும் என்று கூறும் அவர்கள், AC வாங்கி அதனை பராமரிப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கு கட்டும் EB Bill கூட இனி மிச்சமாகும் என்றும் தெரிவித்துள்ளனர். கின்னஸ் சாதனை படைத்துள்ள இந்த பெயிண்ட் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.