Highrise

கண் கெட்ட சூரிய நமஸ்காரம் பண்ண நினைத்தால் முடியுமா? எதையும் செய்வதற்கு முன் யோசித்து செய்ய வேண்டாமா?

May 03 2021 06:50:00 PM

நம்மில் பலரும் ஒரு செயலை செய்வதற்கு முன் யோசிப்பதே கிடையாது. செய்து முடித்த பின் இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்திருக்கலாம் என்று புலம்புவோம். அப்படி புலம்புவதில் பிரயோஜனம் கிடையாது. நம்மைப்போன்ற சாதாரண மனிதர்கள் தான் யோசிக்காமல் ஒரு செயலை செய்து விட்டு பிறகு அதை நினைத்து வருத்தப்படுகிறோம் என்றில்லை. வரலாற்றின் பக்கங்களை புரட்டி பார்த்தால் பல மேதைகள் கூட இந்த மாதிரி செய்துவிட்டு பின்னர் புலம்பியிருக்கிறார்கள்.

american-national-bird

1776ம் ஆண்டு அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது. அமெரிக்காவை நிறுவிய தேச தந்தைகளுள் முக்கியமானவர் தான் பெஞ்சமின் பிராங்க்ளின். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டின் தேசிய பறவையாக கழுகை அறிவித்தார் பெஞ்சமின். ஆனால் சில காலம் கழித்து தனது அறிவிப்பை பற்றி யோசித்து வருந்தினார்.

american-national-bird

இதைப்பற்றி ஒரு கடிதத்தில் அவர் அந்த கழுகை பிரதிநிதிப்படுத்தியிருக்க கூடாது. நற்பண்புகளே இல்லாத ஒரு பறவையை தேசிய பறவையாக அறிவித்துவிட்டேன். இந்த முடிவை எண்ணி இப்போது வருந்துகிறேன். கழுகுக்கு பதிலாக வான்கோழியை தேர்வு செய்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன். எதிரிகள் யாரையும் தன்னுடைய  எல்லைக்குள் அனுமதிக்காத தைரியமான பறவை வான்கோழி என கூறியிருந்தார். இருந்தாலும் காலம் கடந்து விட்டதால் அவரால் எதையும் மாற்ற முடியவில்லை. எனவே எப்போதும் சிந்தித்து செயலாற்றுங்கள் மக்களே.