Highrise

அமெரிக்காவுல வளரும் குழந்தைகள் மட்டும் தங்கள் வாழ்க்கையில் விரைவாக முன்னேற்றமடைவது எப்படி? சின்ன வயசுலயே அவங்க பொறுப்பானவர்களாக மாறுவதை நீங்க கவனிச்சிருக்கீங்களா?

Sep 18 2021 03:21:00 PM

அமெரிக்காவுல வீடு வாங்கணும். நிரந்தரமா அங்கேயே செட்டில் ஆகணும் என்ற ஆசை தமிழ்நாட்டில் உள்ள பலருக்கும் இருக்கிறது. அதை சாத்தியப்படுத்த வேண்டுமென்றால் நீங்க கடுமையாக உழைக்க வேண்டும். நம்ம ஊருல கஷ்டப்பட்டு உழைக்கிற மாதிரி அமெரிக்காவுல மக்கள் உழைக்கிறாங்க என்று நினைக்கிறீங்களா?

united-states-education silicon-valley-school

அமெரிக்கா காரன் எப்பவுமே புத்திசாலியாக இருக்கிறான். ஆங்கிலத்துல ஸ்மார்ட் ஒர்க் என்ற வார்த்தை இருக்குமே. அந்த வார்த்தைக்கு அமெரிக்க மக்களை உதாரணமாக கூறலாம். அவர்களின் வெற்றிக்கு காரணமாக இருப்பது ஸ்மார்ட் ஒர்க் மட்டுமே. இந்த திறமை அவர்களுக்கு சிறு வயதிலேயே வந்து விடுகிறது. அவர்களை சிறு வயதில் இருந்தே வல்லவர்களாக மாற்றுவதற்கு அவர்களுடைய கல்விமுறை உதவி புரிகிறது.

united-states-education silicon-valley-school

என்னுடைய தூரத்து உறவினர் ஒருவர் அமெரிக்காவுல செட்டில் ஆகிவிட்டார். அவர் எப்போதாவது நேரம் கிடைத்தால் ஆன்லைனில் சிறிது நேரம் என்னிடம் உரையாடுவார். அமெரிக்காவின் புகழை பாடுவதில் அவருக்கு ஒரு ஆனந்தம் கிடைக்குது. ஒருநாள் அமெரிக்க கல்விமுறை பற்றி அவர் என்னிடம் கூறினார். அப்போது தான் அமெரிக்காவில் உள்ளவர்கள் எப்படி இவ்வளவு திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர் என்பது எனக்கு புரிந்தது.

united-states-education silicon-valley-school

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சிலிக்கான் பள்ளத்தாக்கு பள்ளி என்ற பெயரில் ஒரு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கற்பிக்கும் முறை முற்றிலும் வேறுபட்டுள்ளது. கரும்பலகை, நோட்டு, பென்சில் இதை வைத்தே எத்தனை ஆண்டுகளை ஓட்டமுடியும் என்பது ஒரு சிலரின் எண்ணமாக இருக்கும் வேளையில் இந்த பள்ளியிலோ கல்வி கற்பிக்கும் முறை முற்றிலும் புதுமையாக உள்ளது.

united-states-education silicon-valley-school

இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு உயர் தொழிநுட்ப உபகரணங்களை பயன்படுத்தி கல்வி கற்பிக்கப்படுகிறது. ஐபாட், 3டி தொழில்நுட்ப கருவிகளை வைத்து நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை ஒன்றிணைத்து பாடம் நடத்துகின்றனர். டிஜிட்டல் கல்விமுறை என்று சொல்வதை விட குழந்தைகளை ஈர்க்கும் கல்விமுறை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

united-states-education silicon-valley-school

இதன்மூலம் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் இதர திறமைகள் யாவும் வெளிப்படும் என்பது இவர்களுடைய நம்பிக்கை. அவர்களை சிறந்த படைப்பாளிகளாக உருவாக்க வேண்டும் என்பதே அமெரிக்க பள்ளிகளின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்தமாதிரி கல்விமுறை நம் நாட்டில் கொண்டு வந்தால் நன்றாக இருக்குமா? தயவு செய்து இந்த கல்வி முறையை கொரோனா ஆன்லைன் வகுப்போடு ஒப்பிட்டு பார்க்காதீங்க.