Highrise

நாட்டுக்கு சுதந்திர தினம்! அதிபர்களுக்கு இறந்த தினம்! இப்படி ஒரு ஒற்றுமை எவ்வாறு வந்திருக்கும்?

Oct 05 2021 12:33:00 PM

ஒரு நாட்டுக்கு சுதந்திர தினம் என்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கிறது. அது தான் அந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மகிழ்ச்சியை தரும் நாள். நாட்டுக்காக போராடியவர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு மரியாதையை கொடுத்து சுதந்திர காற்றை வெற்றிக்களிப்புடன் கொண்டாடும் நாள். ஆனால் சுதந்திர தினமே ஒரு சிலருக்கு இறந்த தினமாக மாறினால் அந்தக்கொடுமையை எப்படி தாங்கிக்கொள்ள முடியும்?

independence-day-deaths united-states

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு நண்பர் அந்த நாட்டின் சுதந்திர தினத்தில் நடந்த சில சோக சம்பவங்களை என்னிடம் கூறினார். அதை என்னால் நம்பவே முடியவில்லை. உலகில் நம்பர் ஒன் நாடாக இருக்கும் அமெரிக்கா ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 4ம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த நாள் அமெரிக்கர்களுக்கு மகிழ்ச்சியான நாள் என்று கூறிவிட முடியாது. ஒரு சிலருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் அமெரிக்காவின் வரலாற்றில் சுதந்திர தினத்தில் சில சோகமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.

independence-day-deaths united-states

குறிப்பாக சுதந்திர தினம் அமெரிக்காவின் அதிபர்களுக்கு ராசியில்லாத நாளாக மாறிவிட்டது. இதற்கு காரணம் பல்வேறு அதிபர்கள் சுதந்திர தினத்தில் தான் தங்கள் உயிரை பறிகொடுத்துள்ளனர். 1826ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி சுதந்திர தினத்தில் அமெரிக்காவின் இரண்டு முன்னாள் அதிபர்கள் மரணமடைந்தனர். தாமஸ் ஜெபர்சன் மற்றும் ஜான் ஆடம்ஸ் ஆகிய இருவரின் மரணமும் ஒரே நாளில் நிகழவே அன்றைய தினம் அமெரிக்காவுக்கு மிகப்பெரும் சோகத்தை தந்த நாளாக மாறியது.

independence-day-deaths united-states

இந்த சம்பவம் நடந்து சில ஆண்டுகளுக்குள் மீண்டும் ஒரு அதிபர் சுதந்திர தினத்தில் மரணித்தார். 1831ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி முன்னாள் அதிபர் ஜேம்ஸ் மன்ரோ மரணமடைந்தார். இதன் காரணமாக அமெரிக்க மக்களை பொறுத்தவரையில் சுதந்திர தினம் என்பது சோகம் கலந்த சுதந்திர தினமாகவே அமைந்துவிட்டது. இப்ப சொல்லுங்க சுதந்திர தினத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் அந்த நாட்டு மக்கள் எப்படி அதை ஒரு சிறப்பான நாளாக கொண்டாட முடியும். அமெரிக்காவின் சுதந்திர தின வரலாறு சில கருப்பு பக்கங்களாலும் மூடப்பட்டுள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.