Timeless

வருகிறது நம்ம கடையின் புதிய கிளை இனிமே எல்லாம் இப்படித்தான் நடக்குமா? இவனுங்களுக்கு மட்டும் எங்க இருந்துதான் இவ்வளவு காசு வருதோ தெரியல ?

May 02 2021 06:36:00 PM

வளர்ந்து வரும் தொழில்நுட்பம் எவ்வளவு சிறியதாக நம்மை சுருக்கி விட்டது. நினைத்த மாத்திரத்தில் உங்கள் கையில் இருக்கும் செல்போனை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். வீட்டுக்கு தேவையான பொருட்களில் ஆரம்பித்து உணவு, உடை, எந்த பொருளாக இருந்தாலும் கடைக்கே செல்லாமல் ஆன்லைன் வாயிலாகவே ஆர்டர் செய்து வீட்டு வாசலில் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். என்னதான் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டிருந்தாலும் அது மனிதர்களை நாளுக்குநாள் சோம்பேறியாக மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

amazon-saloon

சரி இந்த கதையை பற்றி அப்புறம் பேசலாம். பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் விரைவில் தனது அடுத்த தொழிலில் களமிறங்க உள்ளது. அதாவது சலூன் கடையை திறக்கவுள்ளது. அதற்காக ஆன்லைனில் முடிவெட்ட போகிறார்களா என்று நினைக்க வேண்டாம். லண்டன் மாநகரில் முதலில் சலூன் கடையை திறக்கவுள்ளார்கள். முடித்திருத்த தொழிலில் நுழையவுள்ள அமேசான் நிறுவனம் இதற்காக ஆகுமெண்ட்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளது.

amazon-saloon

இது எந்தமாதிரியான சலூன் என்பதை போகப்போக தெரிந்துகொள்ளலாம். சோதனை முயற்சியாக முதலில் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் அமேசான் சலூன் மூலம் முடி திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து உலகம் முழுவதும் பல கிளைகளை நிறுவ அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.