#PENTOPUBLISH: AMAZON நடத்தும் கதாசிரியர்களுக்கான போட்டி!!! 20,00,000 ரூபாய் வரை ரொக்கப் பரிசுகள்!!!
  • 18:45PM Oct 02,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 18:45PM Oct 02,2019 Chennai

AMAZON நிறுவனம் தன்னுடைய KDP எனப்படும் KINDLE DIRECT PUBLISHING-ல் பதிவேற்றம் செய்யப்படும் கதைகளுக்கான பரிசுப் போட்டியை அறிவித்துள்ளது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியில், எழுத்தாளர்கள் மற்றும் கதாசிரியர்கள் தங்களுடைய கதைகளை இலவசமாகப் பிரசுரிக்கலாம் என்று அறிவித்திருக்கிறது. இது மட்டுமல்ல, அந்தக் கதை AMAZON PRIME-லும் படமாக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிய வருகிறது. போட்டியைப் பற்றிய விபரங்கள்:

#1. PEN TO PUBLISH போட்டியில் இது மூன்றாவது EDITION போட்டிகள் தற்போது நடந்து வருகிறது.

#2. 15 SEPTEMBER 2019-லிருந்து 14 DECEMBER 2019 வரை KIDNLE DIRECT PUBLISHING-ல் பதிவேற்றம் செய்யப்படும் கதைகள் மட்டுமே தகுதியானதாகக் கருதப்படும்.

#3. ENGLISH, TAMIL, HINDI என்று நீங்கள் விருப்பப்பட்ட மொழியில் பதிவேற்றம் செய்யலாம்.

#4. EBOOK PUBLISH ஆகும் போது அதன் META-DATA-வில் “PENTOPUBLISH2019” என்று குறிப்பிட வேண்டும்.

#5. 10,000 வார்த்தைகளுக்கு அதிகமான கதைகளுக்கு முதல் பரிசு, ரூ. 5,00,000/-, இரண்டாம் பரிசு ரூ. 1,00,000/-, மூன்றாம் பரிசு ரூ. 50,000/- என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#6. 10,000 வார்த்தைகளுக்குக் குறைவான கதைகளுக்கு முதல் பரிசு, ரூ. 50,000/-, இரண்டாம் பரிசு ரூ. 25,000/-, மூன்றாம் பரிசு ரூ. 10,000/- என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#7. தேர்ந்த எழுத்தாளர்களால் உங்கள் கதை மதிப்பீடு செய்யப்படும் வாய்ப்பு.

#8. கதை நன்றாக இருக்கும் பட்சத்தில், AMAZON PRIME-ல் உங்கள் கதை WEB SERIES ஆக எடுக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.

#9. வேறு பயனுள்ள இணைப்புகள்:  |  Science Project  |  NATA Competitive Exam  |  Call For Code Contest  |  Smithsonian Photo Competition  |  Wrestling Challenge  |

#PENTOPUBLISH உங்கள் கதை எழுதும் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு சிறந்த வழி என்று கூடச் சொல்லலாம். KDP-யில் நேரடியாகப் பதிவேற்றம் செய்வதால், உங்களுக்கு COPYRIGHT பிரச்சினைகள் போன்றவை ஏற்படாது. அப்படியே ஏற்பட்டாலும், AMAZON அதைப் பார்த்துக் கொள்ளும். உங்களை வெளிக்கொண்டு வர ஒரு அரிய வாய்ப்பு. நழுவவிடாதீர்கள்!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top