#Amazon Flex: மணிக்கு 140 ரூபாய் வருமானம் - நீங்களே உங்களுக்கு முதலாளி : இந்தியாவில் அதிரி புதிரி கிளப்பும் Amazon.!
  • 11:23AM Jun 18,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 11:23AM Jun 18,2019 India

இன்னைக்கு படிச்சு முடிச்ச இளைஞர்கள் பல பேரு படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்காம கிடச்ச வேலைய செஞ்சு குடும்ப கஷ்டத்துல பங்கெடுத்துகிட்டு இருக்காங்க. சென்னை மாதிரி சிட்டில தங்கி வேல செய்யும் போது, பலருக்கும் வாங்குற சம்பளம் சாப்பாட்டுக்கும், வாடகைக்கும், போற-வர செலவுக்குமே சரியா போயிருது. தங்களுக்குன்னு மிச்ச படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்காதான்னு ஏங்கி தவிக்கிறாங்க. வேலைக்கு போயிட்டு வந்து ஏதாவது ஒரு ரெண்டு, மூணு மணி நேரம் Part Time Job போலாம்ன்னு யோசிச்சா, swiggy, zomato மாதிரி நல்ல வருமானம் தர வேல கமியா தான் இருக்கு. எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கறது இல்ல. அந்த மாதிரி Part Time Job  எதிர் பார்க்கறவங்களுக்கு amazon நிறுவனம் ஒரு அருமையான வாய்ப்பு கொடுக்க போகுது. amazon flexன்னு சொல்லி, ஒரு திட்டத்த இந்தியாவுக்கு கொண்டு வந்து இருக்காங்க.

#1. amazon flexன்னா பெருசா இல்ல, swiggy, zomatoல சாப்பாடு டெலிவரி பண்ற மாதிரி, இதுல பார்சல் டெலிவரி பண்ணனும் அவளோ தான்.

#2. இதுல டூ வீலர், 3-வீலர், 4-வீலர் வரைக்கும் நம்ம கிட்ட என்ன வாகனம் இருக்கோ அதைய இணைச்சுகலாம்.

#3. நாம எந்த நேரத்துல டெலிவரி பண்ண ஃபிரியா இருப்போம்ன்னு நாமளே முடிவு பண்ணி பதிவு செஞ்சா போதும். அந்த நேரத்துல மட்டும் வேல செஞ்சுக்கலாம்.

#4. ஒரு மணி நேரத்துக்கு 140 ரூபாய் சம்பளமா கொடுக்க முடிவு பண்ணி இருக்காங்க.

#5. இப்போதைக்கு ஆண்ட்ராய்டு மொபைல மட்டும் amazon flex app பயன்படுத்துற மாதிரி விட்ருக்காங்க.

#6. மும்பை, பெங்களூரு, டெல்லியில இந்த திட்டத்த சோதிச்சு பாத்த அப்புறம், இந்தியா முழுசும் அறிமுகப்படுத்த போறாங்க.

#7. இதுல நாமளும் இணைய https://flex.amazon.in/ வெப்சைட்ல போயி பதிவு பண்ணிக்கலாம்.

#Amazon Flex: இந்த திட்டம் மூலம் லட்சக்கணக்கானவர்களுக்கு தங்கள் ஓய்வு நேரத்தில் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குவதாக amazon நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top