AMARAVATHY DAM: வன விலங்குகளின் புதிய மேய்ச்சல் நிலம்!!! கண்கொள்ளாக் காட்சி விருந்து அளிக்கும் அமராவதி அணை!!!
  • 12:22PM Feb 19,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 12:22PM Feb 19,2019 Chennai

உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அமராவதி அணையை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் மழைப்பொழிவின் தாக்கம் குறைந்து விட்டதால் கடந்த சில மாதங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மீண்டும் வறட்சி நிலவ ஆரம்பித்தது. இதன் காரணமாக அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களான பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் அதன் துணை ஆறுகளிலும் நீர்வரத்து குறைந்து விட்டது. இதனால் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்து போய், அணையின் நீர் இருப்பும் வேகமாகச் சரிந்து வருகிறது. முதலில் சேறும், சகதியுமாகக் காட்சியளித்த அணையின் பெரும்பாலான பகுதிகள், தற்போது புற்கள் மற்றும் செடிகள் வளர்ந்து பசுமை போர்த்திய புல்வெளியாக காட்சி அளித்து வருகிறது.

அதே நேரம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வறட்சி நிலவுவதால் யானை, மான், காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குள் உணவு மற்றும் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அமராவதி அணைக்குப் படைடுத்து வருகின்றன. இப்படி உணவுக்காக வனப்பகுதியில் இருந்து பயணத்தை தொடங்கும் வனவிலங்குகள் நீண்ட தூரம் பயணம் செய்து மாலையில் அணையை வந்தடைகிறது. அதன் பின்னர் அணைப்பகுதியில் வளர்ந்துள்ள புற்களைச் சாப்பிட்டு, தண்ணீரைக் குடித்துவிட்டு அங்கேயே இளைப்பாறுகின்றன. இதனால் வன விலங்குகளின் மேய்ச்சல் நிலமாக தற்போது அமராவதி அணை மாறிவிட்டது. அடுத்த நாள் காலையில் வனவிலங்குகள் அணையை விட்டு வெளியேறி உடுமலை - மூணாறு சாலையைக் கடந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றன. ஆனால் மான், காட்டுபன்றி உள்ளிட்ட தாவர வகை வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் திரும்பிச் செல்லாமல் அணைப்பகுதியில் முகாமிட்டு வருகிறது. இதனால் அமராவதி அணை வன விலங்குகள் மயமாக காட்சி அளித்து வருகிறது.

ஒருவிதத்தில் வருந்த வேண்டிய நிகழ்வாக இருந்தாலும், தற்போது அனைத்து விலங்குகளும் வெளியில் வந்து சமவெளியில் முகாமிட்டுள்ளதால், வன விலங்கு ஆர்வலர்களும், மக்களும் ஆர்வமுடன் அதைப் பார்க்க வருகின்றனர். விவசாயத் தேவைக்காக தண்ணீர் போதுமா என்ற கவலை இருந்தாலும், இப்படிப் பல்வேறு விலங்குகள் ஒரே நேரத்திர் சமவெளியில் காட்சியளிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருப்பதும் நிஜம்தான். உடுமலை மூணாறு பகுதிகளில் யானைகளைப் பார்ப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையென்றாலும், மற்ற விலங்குகளை இப்படி வெட்டவெளியில் பார்ப்பது அபூர்வம் என்று சொல்கிறார்கள். இருப்பினும், மக்கள் மற்றும் விளை நிலங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதால், காட்டுக்குள்ளேயே தடுப்பணைகளில் நீர் நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள் மக்கள். நல்லதுதானே!!!

Share This Story

You Might Also Like These
Related Stories
Top