அமலாபாலுக்கு நிகழ்ந்த மோசமான அனுபவம்..? சீண்டிய இயக்குனர் சிக்கிவிட்டார்...
  • 15:08PM Oct 24,2018 Chennai, Tamil Nadu, India
  • Written By AP
  • Written By AP
  • 15:08PM Oct 24,2018 Chennai, Tamil Nadu, India

சினிமாவில் பாலியல் துன்புறுத்துலுக்கு ஆளான நடிகைகள் தொடர்ந்து தங்களுக்கு நடந்த கொடுமைகளை பகிர்ந்து வருகின்றனர். துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய பிரபலங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்,எந்தவித பயமும் இன்றி துணிச்சலாக பேச ஆரம்பித்துவிட்டனர்.பாடகி சின்மயி துணிச்சலாக ஆரம்பித்த ஒன்று, இப்போது பல நடிகை,துணை நடிகைகளை மீடூவில் தைரியமாக பேச வைத்துள்ளது. அந்த வகையில் நேற்று, மும்தாஸ் கூட தன்னிடமும் ஒரு இயக்குனர் தவறாக நடந்து கொள்ள முற்பட்டதாகவும் , பதிலுக்கு தான் அவரை செருப்பால் அடித்ததாகவும், நடிகர் சங்கத்தில் இது குறித்து புகாரும் அளித்திருந்ததாகவும் கூறியுள்ளார்.சரி ,இப்படி எப்போதோ நடந்த சம்பவங்களை இப்போது பதிவு செய்வதால் என்ன பயன் என பலர் கேள்வி கேட்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த #metoo இயக்கித்தின் மூலம் இனி, புதுமுகமாக அறிமுகமாகும் நடிகைகளுக்கு இது போன்ற தொல்லைகள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கலாம்.

இந்தநிலையில் நடிகை அமலாபாலும் தானும் இது போன்ற துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இவர் புகார் கூறுவது இயக்குனர் சுசி கணேசன் மீது ,அவரது பதிவில் லீனா மணிமேகலை டைரக்ட்டர் சுசி கணேசன் மீது கூறிய குற்றச்சாட்டை நான் ஒப்புக் கொள்கிறேன்.நானும் அவரால் அவதிப்பட்டுள்ளேன் என கூறியுள்ளார். முன்னதாக சுசி கணேசன் தன்மீதான குற்றசாட்டு நிரூபிக்கும் பட்சத்தில் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியது குறிப்பிடத்தக்கது.

கவிஞர், இயக்குனர், நடிகை என்றவாறு பல பரிமாணங்களை தன்னுள் வைத்துள்ள லீனா மணிமேகலை, கடந்த 2005ல் தான் தொகுப்பாளினியாக இருந்தபோது டைரக்ட்டர் சுசிகணேசன்,தன்னிடம் காரில் தவறாக நடந்து கொண்டதாகவும்,அவரிடம் இருந்து தப்பிக்க கத்தியை காட்டி மிரட்டியதாகவும் புகார் எழுப்பியிருந்தார்.இதற்கு பதில் கொடுக்கும்விதமாக இயக்குனர் சுசிகணேசன், கத்தி கொண்டு மிரட்டிய நீங்க,அப்போதே நெஞ்சில் ஏன் இறக்கவில்லை என கேள்வியெழுப்பி இருந்தார். நீங்கள் சொன்ன இந்த பொய்யால் என் கற்பு பறிபோய்விட்டது, ஆணுக்கும் கற்பு உள்ளது என கூறியது வைரலானது.இதனையடுத்து அமலாபாலும் இப்படி கூறியிருப்பது சந்தேகங்களை கிளப்பும் வகையில் அமைந்துள்ளது.

 

Top