#rajarani: ஆலியாவிற்கு செம துணிச்சல் தான்! பகிர்ந்து கொண்ட ஒரு புகைப்படத்தால் குவியும் பாராட்டு!
  • 09:17AM Dec 06,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 09:17AM Dec 06,2019 Chennai

ராஜா ராணி சீரியலில் நடித்த கதாபாத்திரமான செம்பா என்றால் மக்கள் மத்தியில் அவ்வளவு பிரபலம்.ஒரு சின்னத்திரை நடிகை, பாலிவுட் நட்சத்திரம் அளவிற்கு கொண்டாடப்படும் பாக்கியம் ஆலியாவிற்கு கிடைத்தது.  அந்த அளவிற்கு அப்பாவி கதாபாத்திரம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஆலியா. 'ராஜா ராணி'  சீரியலின் ஹீரோவான கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் ஆலியா கருவுற்று இருப்பதாக செய்திகள் வெளியாகின.இந்நிலையில் ஆலியா  விளம்பரம் ஒன்றிற்காக இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்களில் இவர் சிறிதும் மேக்கப் இல்லாமல் உள்ளார். 

aliya manasa

இதனை பார்த்த நெட்டிசன்கள் மேக்கப் இல்லாத ஆலியாவா? என அதிர்ச்சி கலந்த வியப்பில் உள்ளனர். ஆர்கானிக் பொருளின் விளம்பரத்திற்காக மேக்கப் இல்லாமல் ப்ரொமோட் செய்துள்ளார் போல.. மேக்கப் போட்ட ஆலியாவை விட இயல்பான தோற்றத்தில் இருக்கும் ஆலியாவிற்கு நல்ல வரவேற்புதான். #KeerthySuresh:எலும்புகள் தெரியும் அளவிற்கு,உடல் இளைத்து காணப்படும் கீர்த்தி! ரசிகர்கள் அதிர்ச்சி!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top