Misc

அலுமினியத் தட்டில் சாப்பாடு சாப்பிடுபவரா? பல கோடிகளுக்கு அதிபதி பாஸ் நீங்க! தங்கம் எல்லாம் டம்மி பீசு!

Oct 14 2020 10:09:47 AM

"ஒரு காலத்தில் நானெல்லாம் எப்படி இருந்தேன். இன்னைக்கு இப்படி மாற்றி வெச்சுட்டீங்களே மனிதர்களா" என்று சொல்லி புலம்புகிறது அலுமினியம். தங்கம், வெள்ளி, அலுமினியத்தால் செய்யப்பட்ட பொருள் உங்கள் கண் முன்னால் வைக்கப்படுகிறது. எது மதிப்பு மிக்கதோ அதனை எடுத்துக்கொள்ளலாம் என்பது விதி. உடனே நாம் என்ன செய்வோம்.? எல்லோரும் நினைத்தபடி தங்கத்தால் செய்யப்பட்ட பொருளை டபக்கென்று தூக்கிக்கொண்டு வந்துவிடுவோம். இதுவே 1800 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த மக்கள் என்றால், அலுமினியத்தால் செய்யப்பட்ட பொருளைத்தான் தேர்வு செய்வார்களாம்.

gold aluminium silver

அந்தக்காலத்தில் பூமியில் கிடைக்கும் அலுமினியத்தை பிரித்தெடுக்க சரியான வழிமுறை கிடையாது. கிலோ கணக்கில் அலுமினியம் கிடைத்தாலே, அது அதிசயமாக பார்க்கப்பட்டது. மூன்றாம் நெப்போலியன் மன்னன், அதனை அருங்காட்சியத்தில் வைக்க, அலுமினியத்தின் மதிப்பு இன்னும் பல மடங்கு கூடியது. அப்போவெல்லாம் அலுமினியத்திற்கு அருகில், தங்கம் எல்லாம் தகரம் மாதிரி தான். பார்க்க பளபளவென எடையும் குறைவாக இருந்ததால், பணக்கார வீட்டு பெண்கள் அலுமினியத்தில் ஆபரணம் செய்து அணிய ஆரம்பித்தனர்.

gold aluminium silver

அரசனுக்கு அலுமினியத்தட்டில் உணவு கொடுப்பது உயர்ந்ததாக கருதப்பட்டது. அவரை அடுத்து வரும் அமைச்சர்களுக்கும், பிற அரசாங்க ஊழியர்களுக்கு தங்கத்தினாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட தட்டில் உணவு படைக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டு முடியும் வரையில், அலுமினியம் உயர்ந்த இடத்திலும், தங்கள், வெள்ளி இரண்டாம் தர உலோகமாகவும் பார்க்கப்பட்டது. எல்லாம் நல்ல படியா தான் போயிட்டு இருந்துச்சு.

gold aluminium silver

பாக்ஸைட்டிலிருந்து அலுமினியம் தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அலுமினியத்தின் மதிப்பு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. 18 ஆம் நூற்றாண்டில் ஒரு கிலோ 84 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட அலுமினியம், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வெறும் 70 ரூபாயிக்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டது. கிராம் கணக்கில் அலுமினியம் கிடைத்த போது, உச்சத்தில் இருந்த அலுமினியம், டன் கணக்கில் கிடைக்க ஆரம்பித்த பின்னர் சரிவை சந்தித்தது. எதுவும் அளவோடு இருந்தால், என்னைக்கும் மதிப்பு இருந்து கொண்டே இருக்கும். அது அலுமினியமானாலும் சரி, நம்முடைய வாழ்வாக இருந்தாலும் சரி.