#AIRCONDITION: A/C காத்து ஜில்லுன்னு SHOCK அடிக்காம இருக்கனுமா??? அப்போ உங்களுக்கு இது அவசியம் தெரிஞ்சாகனும்!!!
  • 12:41PM Oct 13,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 12:41PM Oct 13,2019 Chennai

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் அதிகபட்ச STATUS என்று பார்த்தாலே, அது CYCLE வைத்திருப்பதுதான். பின்னர், இது கொஞ்சம் கொஞ்சமாக BIKE, பின்னர் CAR என்று மாறிவிட்டது. அதே போலத்தான் வீட்டில் இருக்கம் பொருட்களும் மாறித் தற்போது, நடுத்தரக் குடும்பம் என்றால், குறைந்தபட்சம் A/C-யாவது இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், சில்லென்று காற்று வேண்டி வாங்கப்படும் A/C-யின் CURRENT BILL, நடுத்தர வர்க்கத்தினருக்கு SHOCK கொடுக்கும் அளவுக்கு இருக்கிறது. இதைத் தவிர்க்க A/C-யைப் பற்றித் தெரிவது ரொம்ப அவசியம். தெரிந்து கொள்ளலாமா???

#1. A/C வாங்கும் முன் அறையின் கொள்ளளவு, விழும் சூரிய ஒளியின் அளவு அவசியம். அதற்கேற்றாற் போல் 1 TON அல்லது 1.5, 2 TON என்பதைத் தீர்மானியுங்கள்.

#2. உங்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், WINDOW அல்லது SPLIT A/C – இரண்டில் எது தேவையென்று முடிவு செய்யுங்கள். BUDGET-ஐப் பொறுத்தும் முடிவு செய்யுங்கள்.

#3. பயன்பாட்டுக்கு ஏற்றவாறு A/C-யை முடிவு செய்யுங்கள். 5 STAR A/C விலை அதிகம். 6 மணி நேரம், அல்லது வெயில் காலத்தில் மட்டும் என்றால், 3 STAR உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும்.

#4. STAR போலவே BEE STAR மதிப்பையும் கவனியுங்கள்.. 5 STAR BEE என இருந்தால் அதன் மின்சார சேமிப்பு அதிகமாக இருக்கும், 3 என்றால் குறைவாக இருக்கும். உஷார்.

#5. INVERTOR A/C-யின் வேகம் நிலையானதாக இருக்கும். MOTOR வேகம் அதிகமாக இருக்கும். விரைவில் அரை குளுமையாகிவிடும். மின்சாரத்தை மிச்சப்படுத்தவும் இது சிறந்தது.

#6. எந்த இடத்தில் பொருத்தினால் ஏசி காற்று நன்றாகப் பரவும், நேரடியாக முகத்தில் படாது  என்பதைக்  கண்டறிந்து, இடையூறுகள் இல்லாமல் பொருத்துங்கள்.

#7. AIR FILTER-கள் CLEAN AIR, ODOURLESS என்று பல வகையில் அதன் விலைக்கு ஏற்ப கிடைக்கின்றன. அதுபோன்ற அம்சங்கள் உங்களுக்குத் தேவை எனில் வாங்கலாம்.

#8. வேறு பயனுள்ள இணைப்புகள்:  |  Nano Clean A/C  |  Thermo Accoustic A/C  |  Babies In A/C  |  Car A/C Maintenance  |  1800 Rs Air Conditioner  |

#AIRCONDITION வாங்கும் போது, பணத்தைப் பற்றிப் பிரச்சினை இல்லையென்றால், SMART A/C-களும் இருக்கின்றன. நீங்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன்னரே உங்கள் MOBILE மூலம் ON செய்து வீட்டைக் குளுமையாக்கலாம், LOW SOUND, MOSQUITO REPELLENT போன்ற அம்சங்கள் கூட இதில் வருகின்றது. என்ன அதற்குத் தகுந்தது போல விலையைக் கொண்டிருக்கும். தீபாவளி நெருங்கிவிட்டது, தள்ளுபடி விற்பனையும் ஆரம்பமாகிவிட்டது. A/C வாங்குவதாக இருந்தால், மேலே சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு ஜமாயுங்கள்!!! இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top