#alcohol : குடி குடும்பத்தை மட்டுமல்ல உங்கள் உடல்நலத்தையும் கெடுக்கும் !!!
  • 11:39AM May 24,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 11:39AM May 24,2019 Tamil Nadu

சந்தோஷத்திற்க்காக இல்லை ஒரு relaxation காக குடிக்கிறேன் என்று ஆரம்பிக்கும் குடிப்பழக்கம் மெல்ல மெல்ல உங்களை அடிமையாக்கி கடைசியில் உயிரையும் எடுத்து விடும்,அந்த அளவிற்கு கொடூரமான பழக்கம் இந்த குடி தான் இதுவரை ஆண்கள் தான் அதிக அளவில் குடித்து கொண்டிருந்தனர். தற்போது பெண்களும் குடிக்க ஆரம்பித்துவிட்டனர். சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களே அதிகம் குடிக்கின்றனர்.

alcho1.jpg

இனி குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் கெடுதல்களை பற்றி பார்ப்போம் எல்லா மதுபானங்களிலும் இருக்கிற எத்தனால் என்ற இரசாயன சேர்மம் ஒரு நியூரோடாக்ஸின் ஆகும்.இது நரம்பு மண்டலத்தைச் சீர்குலைத்துவிடுகிற அல்லது அழித்துவிடுகிற அளவுக்கு சக்திபடைத்தது. உடலுக்குள் அதிகளவு எத்தனால் செல்லும்போது கோமாநிலையும், கடைசியில் மரணமும் ஏற்படுகிறது.குடிப்பழக்கத்தால் கல்லீரலில் உள்ள செல்களில் டாக்ஸின்கள் தங்கி அந்த செல்களை அழிக்கும். இவை தொடர்ந்தால் இறுதியில் கல்லீரலின் செயல்பாடு முற்றிலும் குறைந்து இறப்பு ஏற்படும்

alchocol.jpg

மேலும் கல்லீரலில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய் ஆகியவற்றிலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை பன்மடங்கு அதிகரிக்கிறது.மதுபானம் குடிப்பதால், மூளையில் இரசாயன மாற்றங்கள் ஏற்படுவதோடு செல்கள் சிதைந்து அழிந்து மூளையின் உருவமே  மாறிவிடுகிறது

alcho2.jpg

கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் குடிக்கும்போது அது அவளுடைய கருவில் வளரும் குழந்தையும்  குடிப்பதற்கு சமம் .இவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூளைக் கோளாறு, மொழிக் கோளாறு, செவிக் கோளாறு, பார்வைக் கோளாறு, நடத்தை கோளாறு மற்றும் மன வளர்ச்சி கோளாறு, ஹைப்பர் ஆக்ட்டிவ் என்று சொல்லப்படும் அளவுக்கு அதிகமான சுட்டித்தனம் ஆகியவற்றுடன் போராட வேண்டியிருக்கிறது

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top