Lushgreen

நடிகர் அஜித் எப்படிப்பட்டவர் தெரியுமா? ரெண்டு படங்களை அஜித்தை வைத்து இயக்கிய வினோத் மனம் திறப்பு!

Oct 10 2021 08:00:00 PM

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கும் நடிகர். இவர் எப்பவுமே தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர். உதவி செய்வதில் வள்ளலுக்கு இணையானவர் என்று சினிமா துறையை சேர்ந்தவர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் அஜித் முக்கியமானவர். என்னதான் இவர் எல்லாருக்கும் உதவி செய்தாலும் இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாது என்று நினைக்கும் எண்ணம் கொண்டவர்.

ajith cinoth sharing screen presents

அஜித் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படம் சம்மந்தமான தகவல்கள் தினமும் வெளியாகி வருகின்றன. தற்போது தல அஜித் எப்படிப்பட்டவர் என்பது குறித்து இயக்குனர் ஹெச்.வினோத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ajith cinoth sharing screen presents

அஜித் வலிமை படத்திற்காக ஒரு ரிஸ்க்கான பைக் சேசிங் காட்சியில் நடித்துள்ளார். அந்த காட்சியை எடுக்கும்போது தல நீங்க இவ்வளவு க*ஷ்டப்பட்டு இந்த காட்சியில் நடிக்குறீங்க, இந்த காட்சியில் நீங்க டூப் போடல என்று பார்ப்பவர்களுக்கும் தெரிய வேண்டும், அதனால் ஹெல்மெட் போடாமல் இந்த காட்சியில் நடியுங்கள் என்று வினோத் அஜித்திடம் சொல்லியுள்ளார். அப்படி எல்லாம் பண்ணக் கூடாது.

ajith cinoth sharing screen presents

ரூல்ஸ் எல்லாத்துக்கும் ஒன்னுதான், ஹெல்மெட் போட்டுக்கிட்டு நடிச்சா தான் என்னை ரசிப்பவர்கள் எப்பவும் ஹெல்மெட் போட்டுக்கிட்டு வண்டி ஓட்டுவாங்க என்று சொல்லியுள்ளார். அதேபோல ஒரு கார் சேசிங் சீனில் ஹாரன் அடிச்சுக்கிட்டே வண்டி ஓட்டுங்க என்று வினோத் அஜித்திடம் சொல்லியுள்ளார். சார் நல்லா கார் ஓட்ட தெரிஞ்சவங்க யாரும் எப்பவும் கார் ஓட்டும் போது ஹாரன் அடிக்கமாட்டாங்க. ஹாரன் அடிச்சா குழந்தைகள் மற்றும் வயசானவங்களுக்கு சி*ரமம் உண்டாகும். இதனால் இந்த காட்சியில் ஹார்ன் அடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். தல எப்பவும் தன்னை பற்றி மட்டும் யோசிக்காமல் மக்களை பற்றியும், சமூகத்தை பற்றியும் நினைத்து தான் ஒவ்வொரு காட்சியிலும் நடிக்கிறார் என்று அஜித் பற்றி வினோத் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ajith cinoth sharing screen presents