#VivekOberoi என்னால் ஐஸ்வர்யாவை மறக்கவே முடியவில்லை அப்போது! - தனது முன்னாள் காதல் குறித்து மனம் திறந்த நடிகர்!
  • 17:54PM Sep 20,2019 Mumbai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:54PM Sep 20,2019 Mumbai

நல்ல நடிகராக இருந்தாலும், திரையுலகில் காதல் போன்றவற்றில் சிக்கிக்கொண்டால் வாழ்க்கை எப்படித் தலைகீழாக மாறும் என்பதைப் பிரபல பாலிவுட் நடிகர் Vivek Oberoi கண்டு தெரிந்துகொள்ளலாம். நல்ல நடிப்பு திறன் இருந்தும் இவர் பாலிவுட் திரையுலகில் பெயர் பெறத்துக்கு முக்கியக் காரணம் ஐஸ்வர்யா ராய் உடனான காதலும், சல்மான் கானின் எதிர்ப்பும் தான். தற்போது இவர் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனை ஒரு விழாவில் சந்தித்துள்ளார். அதன்பின் இவர் கொடுத்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

#AlinaRai அச்சுஅசல் கத்ரீனா கைப் போலவே இருக்கும் இந்த இளம்பெண் யார்?

via GIPHY

முன்பு சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் காதல் விவகாரம் இந்தியா முழுக்கப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் எப்படியும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எண்ணிய நேரத்தில் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பின் தனிமையடைந்த ஐஸ்வர்யாவை விவேக் ஓப்ராய் அரவணைத்துக்கொண்டார். இவர்கள் காதலிக்கத் தொடங்கிய செய்தியை கேட்ட சல்மான் கான் பெரும் வெறுப்படைந்தார். விவேக் ஓப்ராய்க்கு போன் செய்து திட்டியுள்ளார். இதுமட்டுமின்றி அவரைக் கொலை செய்வதாகவும் மிரட்டினார். ஒரு அளவுக்கு மேல் பொறுமை இழந்த விவேக் ஓப்ராய், பிரஸ் மீட் ஒன்று வைத்துத் தங்கள் காதல் விவகாரம், சல்மான் கானின் மிரட்டல் போன்ற அனைத்தையும் தெரிவித்துவிட்டார். அந்தப் பிரஸ் மீட்டுக்குப் பிறகுதான் விவேக் ஓப்ராயின் வாழ்க்கை தலைகீழாக மாறியது!

via GIPHY

சல்மான் கானிடம் பல முறை மன்னிப்பு கேட்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, ஐஸ்வர்யா ராய் இவரது தொடர்பை முற்றிலுமாக முறித்துக் கொண்டார். ஐஸ்வர்யா ராயின் பிரிவால் விவேக் ஓப்ராயின் வாழ்க்கையே வெறிச்சோடி இருந்தது. அவரை மறக்கமுடியாமல் சோக கடலில் முழுகி திரிந்துள்ளார், யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். இந்த நிலையில் இவருக்குத் துணையாக இருந்தது கரீனா கபூர் தான் என்று விவேக் ஓப்ராய்த் தெரிவித்துள்ளார். கரீனா கபூரும், சைப் அலி கானும் அடிக்கடி இவரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். இவர்கள் உதவியால் காதல் தோல்வி துயரத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். அதன்பின் Priyanka Alva என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top