Misc

சந்தன மரத்தை விட பல மடங்கு லாபம் தரும் மரம் எது தெரியுமா?

Jun 17 2021 11:19:00 AM

உலகிலேயே அதிக லாபம் தரும் மரவகைகளில் சந்தன மரம் தான் முதல் இடத்தில் இருக்கிறது என்கிற எண்ணம் நம் எல்லோரிடமும் உள்ளது. ஆனால் சந்தன மரத்தை விட பல மடங்கு லாபம் தரும் ஒரு வகை மரம் உள்ளது. அகர் மரம் தான் எந்த வித பராமரிப்பும் இன்றி அதிக அளவில் லாபம் தரக்கூடிய மரம் என்று சொல்கிறார்கள்.

agar india tree

சந்தன மரத்தை விட 10 மடங்கு லாபம் இந்த அகர் மரத்தில் இருந்து கிடைக்கிறது. இந்த அகர் மரம் ஒரு கிலோ 50 ரூபாயில் இருந்து 10000 ரூபாய் வரை தரத்தைப் பொருத்து விற்கப்படுகிறது. 1 கிலோ அகர் எண்ணெய்யின் விலை தரத்தைப் பொறுத்து 50000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. சந்தன மரம் 20 ஆண்டுகளில் கொடுக்கும் வருமானத்தை இந்த அகர் மரம் வெறும் 8 ஆண்டுகளில் சம்பாரித்துக்கொடுக்கிறது.

agar india tree

இந்த அகர் மரத்தில் இருந்து விலை உயர்ந்த வாசனை திரவியங்கள், சோப்புகள், அகர் பத்திகள், பலவகையான மருந்துப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவின் வடகிழக்குப்பகுதிகளில் இந்த மரங்கள் அதிக அளவு பயிரிடப்படுகின்றன. இந்த மரங்கள் 2000 ஆண்டுகள் பழமையானவை. ஆனால் இந்த மரத்தைப் பற்றி மக்கள் அதிக அளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

agar india tree

இந்த மரம் எல்லா இடங்களிலும் வளர்வதில்லை. இந்த மரம் வளர சரியான தட்பவெப்பநிலை இருந்தால் மட்டுமே வளரும் தன்மை கொண்டது. எல்லா மண் பகுதிகளிலும் வளர்ந்தாலும் இயற்கை வளம் நிறைந்த மண் உள்ள மலைப்பிரதேசங்களில் இந்த மரம் நன்றாக வளரும் தன்மை கொண்டது. வருடத்திற்கு 125 முதல் 750 செண்டிமீட்டர் மழை பெய்யும் இடங்களிலும், கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் முதல் 1500 மீட்டர் உயரம் உள்ள மலைப்பகுதிகளில் இந்த மரம் செழிப்பாக வளரும்.

agar india tree

இந்த மரத்திற்காக விவசாயிகள் எந்த வித வேலையும் செய்ய வேண்டியதில்லை. இந்த மரங்களை பயிரிட்டால் மட்டும் போதும். இந்த மரத்தில் இருந்து உதிரும் இலைகள் மக்கிய பின்னர் அந்த இலைகளையே தனது உரமாக மாற்றிக்கொண்டு இந்த அகர் மரம் செழிப்புடன் வளர்கிறது.

agar india tree