#Tamannaah Bhatia : இப்படி ஒரு டிரெஸ் தமன்னா இது வரைக்கும் போட்டதில்ல - இரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.!
  • 20:23PM Jun 20,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 20:23PM Jun 20,2019 India

எனக்கு பயோபிக் படத்துல நடிக்கணும்னு ரொம்ப ஆசை. இந்திரா காந்தி அம்மையாரா நடிக்க தயாரா இருக்கேன் என்று மனதுக்குள் இருந்த ஆசையை வெளிப்படுத்தினார் தமன்னா. பாகுபலிக்கு பிறகு டபுள் ஹீரோயின் படங்களில் நடிக்க தமன்னா தயக்கம் காட்டுவதில்லை.

சமீபத்தில் வெளிவந்த தேவி 2 படமும் டபுள் ஹீரோயின் படம்தான். தமன்னாவுடன் மற்றொரு ஹீரோயினாக நந்திதா நடித்திருந்தார். அடுத்து சிரஞ்சீவி நடிக்கும், 'Sye Raa Narasimha Reddy' படத்திலும் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருக்கிறார் தமன்னா. சில தினங்களுக்கு முன்பு Sye Raa Narasimha Reddy படத்தில் தமன்னாவின் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

'இது தமன்னாவா?” என்று கேட்கும் அளவுக்கு அவரது தோற்றத்தில் பெரிய மாற்றம் தெரிந்தது. அந்தளவுக்கு மேக் அப் அவரை மாற்றியிருந்தது. 'செ ரா படத்துல வெளியான என்னோடு ஃபர்ஸ்ட் லுக் பார்த்த நெறயபேர் இது நீங்க தானான்னு கேக்கறளவுக்கு எனது தோற்றம் முற்றிலும் புதுசா இருந்துச்சி. நான் அணிஞ்சிருந்த லெஹெங்கா டிரஸ் இதுவர நான் அணிஞ்சி நடிச்ச டிரஸ்லயே ரொம்பவும் காஸ்ட்லி.

இத சிரஞ்சீவி மூத்த மகள் சுஷ்மிதா மற்றும் அஞ்சுமோடி வடிவமைச்சிருந்தாங்க. மறுபடியும் சொல்றேன் இதுவரை நான் அணிஞ்சி நடிச்சதிலேயே இதுதான் ரொம்ப காஸ்ட்லியான டிரஸ்' என்று தனது காஸ்டியூம் பற்றி ஆச்சர்யமாக குறிப்பிட்டார் தமன்னா.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top