#HumansBestFriend முதலாளி ஜெயிலுக்குப் போனதால கூடவே போலீஸ் ஸ்டேஷன் போன வளர்ப்பு நாய்!
  • 17:33PM Jul 03,2019 Madhya Pradesh
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:33PM Jul 03,2019 Madhya Pradesh

மத்திய பிரதேசத்தில் தனது எஜமானை கைது செய்து அழைத்துச் சென்றதால் அவர்களுடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு வளர்ப்பு நாயும் சென்றுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோகர் அகிர்வார். இவரும், இவரது இரண்டு மகன்களும் நிலப்பரச்சனை காரணமாகக் கூட்டுசேர்ந்து ஒரு குடும்பத்தைக் கொன்றுள்ளனர். அந்தக் குடும்பத்தினரை கொன்ற கொலை வழக்கில் மனோகர் மற்றும் அவரது 2 மகன்களைப் போலீசார் கைது செய்தனர். மனோகரின் வீட்டில் அவரையும், அவரது மகன்களைத் தவிர அவர்களின் செல்லப்பிராணியான நாய் மட்டும் தான் வசித்து வந்துள்ளது.

இந்நிலையில் இவர்கள் மூவரையும் கைது செய்யும் போது அந்த வளர்ப்பு நாய் வெறித்தனமாகக் குரைக்கத் தொடங்கிவிட்டது, அதன்பின் போலீசார் அந்த நாயை கட்டுப்படுத்தினர். இவர்கள் மூவரையும் கைது செய்வதால் அந்த நாயை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை. எனவே அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் இந்த வளர்ப்பு நாயை பார்த்துக்கொள்ள முடியுமா? என்று காவல் துறையினர் கேட்டுள்ளனர், ஆனால் அவர்கள் அனைவரும் தங்களால் பார்த்துக்கொள்ளமுடியாது என்று தெரிவித்துள்ளனர். நாயை தனியாக விட்டுச்செல்ல மனமில்லாத காவல் துறையினர் அந்த நாயையும் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்துவிட்டனர்.

இந்த நாயின் முதலாளிகள் ஜெயிலில் இருக்க, காவல் துறையினரின் அரவணைப்பில் இந்த நாய் வளர தொடங்கிவிட்டது. பணி நேரம் போக மற்ற நேரத்தில் காவல் அதிகாரிகள் அனைவரும் இந்த நாயுடன் விளையாடி வருகின்றனர். நாயை அன்பாகக் குளிப்பாட்டுவது, சோறு வழங்குவது என அனைத்தையும் காவல் துறையினரே செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி இரவு நேரத்தில் வேலை செய்யும் காவல் துறையினருக்கு இந்த நாய் துணையாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த நாயும் போலீசாருடன் அன்பாகப் பழகி வருகிறதாம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top