ADMK CHECKMATE: DMDK-வுக்கு CHECK வைத்த ADMK!!! 4 சீட்தான் தர முடியும் என்று கறார்!!!
  • 17:33PM Mar 09,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 17:33PM Mar 09,2019 Chennai

தேமுதிகவுக்கான கதவுகளைத் திமுக மூடிய பிறகு, தேமுதிகவைச் சேர்ந்த இரண்டு மாவட்டப் பொறுப்பாளர்கள் “ஏதோ சொந்த வேலையாக” துரைமுருகனைப் பார்க்கப் போனது வெளியாகி, அதனால் பலத்த பரபரப்பு ஏற்பட்டது. ஒரே நேரத்தில், இரண்டு பேருடன் பேசியது தவறல்ல, ஆனால், வெளிப்படையாகச் சொல்லியதுதான் தவறு என்ற ரீதியில் தேமுதிக பேசி வருவது மக்களில் பெரும்பாலானோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால், கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டாலும், உடனடியான REACTION என்பது அவர்கள் கூட்டணிக்கு போக விரும்பும் அதிமுகவிடமிருந்து வந்ததுதான் எதிர்பாராத விஷயம் என்று கூடச் சொல்லலாம். திமுக கண்டு கொள்ளவே இல்லை. சரி அப்படி என்னதான் REACTION கொடுத்தது அதிமுக என்று தெரியுமா???

ஏற்கெனவே தேமுதிகவுக்கு 4 சீட்தான் தர முடியும் என்று அதிமுக பேசிக் கொண்டிருப்பதாகத்தான் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. தேமுதிக சட்டமன்றத் தேர்தலுக்கும் கூட்டணியும், 21 சீட்டும் கேட்டு, தருவதாக இருந்தால் அந்த சீட்டுக்கு ஒப்புக் கொள்வதாக, அடுத்த கட்டக் கூட்டணிக்கும் அடிபோட்டுக் கொண்டிருந்தார்கள். பிரேமலா பேசும் போது அதிமுகவையும் சாடி உளறிக் கொட்டியதால், அதிமுகவினரும் கடுப்பாகியிருப்பதை தொலைக்காட்சிப் பேட்டிகளில் தெரிய வருகிறது. இதனால், அதிமுகவும் கறாராக “4 சீட்தான் தரமுடியும், ஒரே நாள்தான் TIME கொடுக்க முடியும். இஷ்டம்னா வா” என்ற ரீதியில் பேசிவிட்டார்களாம். இதனால், கேட்ட சீட்டும் கிடைக்காமல், “பசை”யும் கிடைக்காமல் சரியாக மாட்டிக் கொண்டது தேமுதிக என்று சொல்கிறார்கள். இன்னும் இரண்டு நாள்தானே… தெரியும், விஜய பிரபாகரன் சொன்ன காலில் விழுந்த கட்சி எதுவென்று!!!     

Top