சிறுவயது முதல் இத்தனை கொடுமைகளா..?? பெற்றவர்களே கொடுத்த டார்ச்சர், பிரபலத்தின் உருக வைக்கும் பதிவு..
  • 11:33AM Apr 13,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 11:33AM Apr 13,2019 Chennai

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சங்கீதா. பாடகர் க்ரிஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை உள்ளது..நேற்றைய தினம் இவர் குறித்த ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.என்னவென்றால், தனது தாயாரை இவர் வீட்டை விட்டு வெளியேற சொன்னதாகவும் எங்கே போவதென அறியாது அவர் தாயார் பானுமதி தமிழ்நாடு மகளீர் ஆணையத்தில் சங்கீதா மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து விளக்கமளிக்க சங்கீதா அவரது கணவர் க்ரிஷுடன் நேரில் ஆணையத்தில் ஆஜராகியிருந்தார்..சங்கீதா பெயரில் உள்ள வீட்டை அவரது சகோதரர்கள் அபகரிக்க நினைப்பதாகவும் இதற்கு தன் தாயாரும் துணை சென்று விடுவார் என்ற பயத்திலே இப்படி செய்ததாகவும் கூறப்படுகிறது..இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்து வருகிறது..

இதனையடுத்து சங்கீதா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சர்ச்சை குறித்து பேசியுள்ளார்..சின்ன வயது முதலே தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து விளக்கியுள்ளார். 13 வயதிலே பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்புனீங்க,பிளாங்க் செக்கில் கையெழுத்து வாங்குனீங்க,குடிக்கு அடிமையான உங்களது மகன்களுக்காக என்னை வேலைக்கு அனுப்புனீங்க, திருமணமும் செய்யவிடவில்லை, என் கணவரை தொல்லை செய்து எங்களது அமைதியை சீரழித்தீர்கள்,இப்போது புகார் அளித்துள்ளீர்கள்,அனைத்துக்கும் நன்றி..உங்களால் சாதாரணவளாக இருந்த நான் இப்போது போராளியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என உருக்கமாக ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்..

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top