Lushgreen

#ramyakrishnan: இன்னோவா காருக்குள் நடிகை ரம்யா கிருஷ்ணன் செய்த வேலை? கதவை திறந்ததும் போலீசார் கண்ட காட்சி!

Jun 13 2020

சென்னையை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு கெடுபிடிகள் அதிகமாகும் என்று வதந்தி பரவி வருவதால், கொஞ்சம் பிரஷர் எகிறினாலும், அதெல்லாம் பொய் என்று முதல்வரே சொன்னபிறகு மனது கொஞ்சம் சாந்தமடைகிறது. இருந்தாலும், நிலை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று கணித்த மது பிரியர்கள், முன்னரே ஸ்டாக் வைக்க மும்முரமாக களமிறங்கியதை காண முடிகிறது. சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி, சமுதாயத்தில் அந்தஸ்து மிக்க பிரபலமாக இருந்தாலும் சரி, ஒரு துளி மது வாடை வாயில் ஒட்டிவிட்டால், எந்த சூழ்நிலை வந்தாலும், அப்பழக்கத்தை விடுவது கொஞ்சம் கடினம். இந்த நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக வந்த இன்னோவா காரை நிறுத்தி சோதனை செய்ததில், ஏராளமான மது மற்றும் பீர் பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடைசியில் பார்க்கப்போனால், நம்ம ராஜமாதா ரம்யா கிருஷ்ணனின் கார் அது. வசமா சிக்கிட்டமே என்ன பண்றது என்ற யோசனையில் விழி பிதுங்கி நிற்க, டிரைவர் மேல் பழியை போட்டுவிட்டு, சிக்கல் இல்லாமல் காரியத்தை முடித்து, கச்சிதமாக வீடு திரும்பியுள்ளனர். நடிகனோ, நடிகையோ திரையில் காணும் ஒரு பக்கத்தை மட்டுமே கண்டு, அவர்கள் பின்னால் சென்று நம் வாழ்வை இழந்துவிடக்கூடாது. எல்லோருக்கும் ஒரு தனிப்பட்ட பக்கம் இருக்கும் என்பதை உணர்ந்து, நம்முடைய வாழ்வை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். 

Salute salute salute

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Salute salute salute #coronavirusepidemia

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan) on

 

Salute to those relentlessly fighting

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Salute to those relentlessly fighting #corona

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan) on