#biggboss3: இவங்க ஊளையிடுவதை தட்டி கொடுக்க வேண்டாமே! பிரபல சேனலுக்கு கண்டிப்பு விடுத்த பிரபலம்?
  • 15:41PM Oct 14,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 15:41PM Oct 14,2019 Chennai

பிக்பாஸ் ஷோவில் 3-வது  சீசனின் போது  வைல் கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் சீசன் 1 முதல் பிக்பாஸில்  நடப்பவற்றை சுட்டி காட்டி எப்போதும் பரபரப்பாக ட்விட் செய்வார்.  இந்த சீசனில் இவர் உள்ளே என்ட்ரி கொடுத்த போது,  ஷோ வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.ட்விட்டரில் வரிந்து கட்டி கொண்டு  குரல் கொடுக்கும் கஸ்தூரியின் குரல் பிக் பாஸ் வீட்டிற்குள் காணாமல் போனது. 

WeAreTheBoys

 கவின், சாண்டி, தர்ஷன், முகேன் மற்றும் லாஸ்லியா ஆகியோரின் குரல் தான் மேலோங்கியிருந்தது.மதுவும் ஒருமுறை  ஆண்களது குரலே இங்கு ஓங்கியுள்ளது என குற்றம் சாட்டியிருந்தார். அதனாலே கஸ்தூரியின் வாய்ஸும்  காணாமல் போனது என்கிறார்கள் ரசிகர்கள்.இப்படி இருக்க கவின், சாண்டி, தர்ஷன், முகேன் இவர்களை வைத்து விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது. 

kasturishankar

இதற்கான ப்ரோமோ வீடியோ சமீபித்தில் தான் வெளியானது. இதனை பார்த்த கஸ்தூரி 'நான் ஆம்பள நான் ஆம்பள என்று தனக்குத்தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே?' என ட்விட் செய்துள்ளார். இதனையடுத்து உங்களுக்கு பிடித்தவர்களை இப்படி ப்ரொமோட் செய்யாதீர்கள் எனவும் கண்டித்துள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top