#meena:மகிழ்ச்சியில் வாயடைத்து போன மீனா! உணர்ச்சிவசப்பட்டு உளறிவிட்டாரே!
  • 18:30PM May 01,2020 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 18:30PM May 01,2020 Chennai

ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாக உள்ள 'தலைவர் 168' படத்தில் நடிகை மீனா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ஏ.ஆர். முருகதாஸின் 'தர்பார்' படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் சிறுத்தை சிவா டைரெக்ஷனில் நடிக்க உள்ளார்.  இந்த படத்திற்கு பெயரிடப்படாத காரணத்தால் தற்காலிகமாக 'தலைவர் 168' என பெயர் வைத்துள்ளனர் படக்குழு. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. 

முன்னதாக டைரக்டர்  சிவா, நடிகர் கார்த்தியை வைத்து 'சிறுத்தை' படத்தினை இயக்கினார்.அதனையடுத்து, அஜித்தை வைத்து வீரம்,வேதாளம், விவேகம், விஸ்வாசம் என ஹிட் படங்களை கொடுத்து வந்த நிலையில் தற்போது ரஜினியை வைத்து 'தலைவர் 168' படத்தை இயக்கவுள்ளார்..இந்த படத்திற்கு டி.இமானது இசைதான் என்பதும் உறுதியாக்கப்பட்டது. 

இதனையடுத்து தலைவர் 168 இல் நடிகை மீனா ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக, சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இது குறித்து மீனா கூறியது பின்வருமாறு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனக்கு இது முதல் படம் என்றும் பல வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் பணிபுரிய உள்ளது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தனது கேரக்ட்டர் குறித்த இன்னொரு தகவலை பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தில் தான் வரும் காட்சியெல்லாம் மிகவும்  கலகலப்பா இருக்கும் என கூறியுள்ளார். முன்னதாக கீர்த்தி இப்படத்தில் நடிப்பதும் உறுதியானது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top