நடிகர் விஷ்ணு மகனின் வைரல் புகைப்படம்..!!
  • 14:11PM Apr 05,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 14:11PM Apr 05,2019 Chennai

'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் விஷ்ணு. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் .இவர் கடந்த ஆண்டு நடித்திருந்த 'ராட்சஷன்' படம் தமிழ் சினிமாவில் சக்கை போடு போட்டது.பல நாட்களுக்கு பின்னர், அருமையான த்ரில்லர் மூவி பார்த்த அனுபவம் ரசிகர்களுக்கு கிடைத்தது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் விஷ்ணு தன் காதல் மனைவியை விவாகரத்து செய்தார்.
4 வருடமாக காதலித்த இருவருக்கும் ஆர்யன் என்ற அழகான ஆண்குழந்தை உள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்தாலும் விவாகரத்து ஆனது முதல் குடும்பம் தொடர்பான எந்த புகைப்படங்களையும் ஷேர் செய்யாமல் இருந்தார் விஷ்ணு.தற்போது பல மாதங்களுக்கு பிறகு தனது மகனின் புகைபபடத்தை ஷேர் செய்துள்ளார். இவரும் அமலாபாலும் காதலிப்பதாக வதந்திகள் வந்தாலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top