Highrise

காமெடி நடிகரான சிவா வந்தபாதை இவ்வளவு கடினமானதா..?

Nov 21 2018 12:46:00 PM

இன்று தமிழ்த்திரையுலகில் அறியப்பட்ட நடிகராக மிகுந்த செல்வாக்குடன் உள்ள நடிகர் சிவா, தனது எதார்த்தமான காமெடியால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர். 'தமிழ்ப்படம்' இவருக்கு திரையுலகில் நிரந்தர இடத்தை கொடுத்தது,இவரது 'தமிழ்ப்படம்- 2' விற்கு ரசிகர்கள் காத்திருக்கும் அளவிற்கு செல்வாக்கு கொண்டவராக மாறியுள்ளார்.இவரது இந்தவெற்றி இப்போது சமீப கால உழைப்பின் காரணமாக வந்ததல்ல.2001 லே தனது திரையுலக பயணத்தின் பிள்ளையார் சுழியை போட்டுவிட்டார் சிவா,2001 இல் ஷாம் நடிப்பில் வெளியான 12B படத்தில் அறிமுகமாகிய சிவா,படிப்பு வராத காரணத்தால் சென்னை வந்து சிறு சிறு ட்ராமாக்களில் நடித்துள்ளார்.விசில் படத்தில் நடித்து, திரைத்துறையில் வாய்ப்புகளை தேடிக்கொண்டார். பின்னரே பல கஷ்டங்களை கடந்து சென்னை-600028,தமிழ்ப்படம் போன்ற படங்களில் நடித்தார். இவரது இந்த இளம் வயது போடோக்களை பார்த்த ரசிகர்கள் சிவாவா இது என வியப்படைந்துள்ளனர்.