மனைவியிடம் பேசினால் கூட வரியா..?? புதுசா இருக்கே..
  • 17:51PM Apr 13,2019 Sivaganga
  • Written By AP
  • Written By AP
  • 17:51PM Apr 13,2019 Sivaganga

பிரபல காமெடி நடிகர் செந்தில் அவர்கள் சிவகங்கை தொகுதி மக்களவை தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மற்றும் மானாமதுரை தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மாரியப்பன் கென்னடி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.. செந்தில் அவர்கள் மானாமதுரை , முத்தனேந்தல் , திருப்பாச்சேத்தி உள்ளிட்ட இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்..

பிரச்சாரத்தில் செந்தில் பேசுகையில், பிஜேபி ஆட்சியில் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பொதுமக்கள் பலரும் பெரிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஹோட்டலில் சாப்பிட்டால் கூட வரி , இனி அவரவர் மனைவியிடம் பேசினால் கூட வரி விதிக்க சான்ஸ் உள்ளது என காமெடியாக விமர்சித்தார்.

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்க மறுக்கவேண்டாம் வாங்கி கொள்ளுங்கள் ஏனெனில் அது உங்கள் பணம் என்றும் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் கண்கொத்தி பாம்பாக பணப்பட்டுவாடா குறித்து ஆய்வு செய்துகொண்டிருக்கும் வேலையில் இவர் வெளிப்படையாக ஓட்டுக்கு பணம் வாங்கலாம் என கூறுவது சர்ச்சையாக பார்க்கப்படுகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top