#Mano : நடிகர் மனோ விபத்தில் மரணம் பதறவைக்கும் வீடியோ உள்ளே !!!
  • 00:36AM Oct 30,2019 Chennai
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 00:36AM Oct 30,2019 Chennai

தமிழில் புகழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் மற்றும் நடிகர் மனோ. அந்த படத்தில் மூன்று கதாநாயகருள்  ஒருவராக நடித்துள்ளார். மேலு‌ம் மனோ சன் டிவியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான  மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்ஸராகவும் மக்கள் மத்தியில் பிரபலமானார் மனோ.

Mano (1).jpg

இந்த சூழ்நிலையில்  நடிகர் மனோ தீபாவளி தினத்தன்று அதாவது  கடந்த ஞாயிற்றுக்கிழமை   தனது மனைவி லிவியாயுடன் காரில் சென்றுள்ளார்.அப்போது திடீரென்று, எதிர்பாராதவிதமாக கார் அதன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால் சம்பவ இடத்திலேயே நடிகர் மனோ உயிரிழந்தார். அவரது மனைவி சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் இருவருக்கும் 7 வயது மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் நண்பரும் சின்ன திரை நடிகருமான கமல் என்பவர் நடிகர் மனோ கார் விபத்திற்குள்ளான கட்சியின் CCTV வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்,நெஞ்சை பதைபதைக்க வைக்கும் விபத்து காட்சி தற்பொழுது வைரலாகி வருகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top