இந்த நடிகை இவ்வளவு பெரிய பிரபலத்தின் மனைவியா? வில்லத்தனத்தில் கொடிகட்டி பறந்த நடிகர் செந்தாமரையை நினைவு இருக்கிறதா?
  • 07:31AM Apr 23,2018 Chennai, Tamil Nadu, India
  • Written By AP
  • Written By AP
  • 07:31AM Apr 23,2018 Chennai, Tamil Nadu, India
ரஜினி மற்றும் கமலுடன் வில்லன் ரோலில் நடித்திருந்த மறைந்த நடிகர் செந்தாமரையை அவ்வளவு விரைவில் மறக்க முடியுமா? எண்பதுகளில் ரிலிஸ் ஆகியிருந்த இவர் நடித்த ஏதேனும் ஒரு பழைய படங்களை பார்க்கும் போது ரியல் வில்லனாகவே  கலக்கி இருப்பார்.பார்க்கும் ரசிகர்களுக்கும் இவர் மீது தனி கோபமே வந்துவிடும் அந்த அளவிற்கு வில்லன் கதாபாத்திரத்தோடு பக்காவாக பொருந்தியிருப்பார்.
 
 
 
சரி இவர் தான் வில்லன் ரோலில் வலம் வந்தார் என்றால் தற்போது இவரது மனைவியும் சீரியல்களில் வில்லி ரோலில் நடிக்க வந்துவிட்டார்.ஆமாம் நடிகர் செந்தாமரையின்  மனைவியான கௌசல்யா பிரபல சேனலில் "பூவே பூச்சுடவா"என்ற சீரியலில் வில்லியின் அம்மாவாக நடித்து வருகிறார்.
இங்கு வில்லி ரோலில் நடிப்பவர் யுவராணி இருப்பினும் கோள் மூட்டி கோபத்தை ஏற்படுத்தி சீரியலில் நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக இருப்பவர் இந்த பாட்டி கௌசல்யா தான். வயதான கேரக்டர் கொடுத்திருந்தாலும் குறும்பு தனமான தனது நடிப்பால் தனி நட்சத்திரமாக சீரியலில் ஜொலிக்கிறார்.
 
 
 
செந்தாமரையின்  மனைவியான கௌசல்யாவும் செந்தாமரையும் ஒரு நாடகத்தில் அண்ணன் தங்கையாக நடித்துள்ளனர். ஆனால் நாம் நினைப்பது போல இவர்களுக்குள் காதல் ஏதும் இல்லை.மோதல் மட்டுமே இருந்துள்ளது.இருப்பினும் இந்த மோதலும் ஒருவகையான காதல் தான் என்று உணர்த்தி கல்யாணம் செய்து வைத்தவர் RR.லலிதா.
 
 
திருமணத்திற்கு பிறகு இவர்களது திருண வாழ்க்கையில் மோதல் என்பதே இல்லை ஏனெனில் இருவரும் படங்களில் பிசியாக இருந்துள்ளனர். கணவர் இருந்த நாட்களில் தன்னை ராணி போலவே வைத்து கொண்டார் என உருக்கமாக கூறுகிறார் கௌசல்யா.
 
 
என்னதான் சினிமாக்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நிஜ வாழ்கையில் நடிகர் செந்தாமரை ரியல் ஹிரோவாக வாழ்ந்திருந்தார் என்றே கூற வேண்டும். ஏனெனில் இன்றும் காலை எழுந்தவுடன் தனது கணவரது படத்தை பார்த்து குட் மார்னிங் சொல்லும் வழக்கத்தில் உள்ளார் நடிகை கௌசல்யா.காதலுக்கு வயசு தேவையில்லை இளமையான மனம் இருந்தாலே போதும் என்பதை இவர்களது காதல் உணர்த்துகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top