உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த இந்த ஆச்சாரியர் யார்?
  • 11:49AM Mar 08,2019 India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 11:49AM Mar 08,2019 India

ஃபோர்ப்ஸ் நிறுவனம் அண்மையில் உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஆச்சார்யா பாலகிருஷ்ணா 365-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவுக்குப் பரீட்சயமே இல்லாத இவர், ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் இடம்பிடித்துள்ளார் என்பது ஆச்சர்யமான விஷயம் தான்! எஃப்எம்சிஜி துறையில் வெளிநாட்டு நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளிய பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இவர்தான்!

Image result for acharya balkrishna

பதஞ்சலி பொருட்களைப் பார்த்ததும், நமக்குப் பாபா ராம்தேவ் தான் ஞாபகம் வருவார். இந்தியாவில் பலர் பாபா ராம்தேவ் தான் பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளர் என்று நினைத்து கொண்டிருப்போம். ஆனால் உண்மையைக் கூறவேண்டும் என்றால், பதஞ்சலி நிறுவனத்தில் பாபா ராம்தேவ்வுக்கு இருக்கும் பங்கு வெறும் 6 சதவீதம் தான்! அந்நிறுவனத்தின் விளம்பரத்தூதராக இவர் செயல்பட்டு வருகிறார். பதஞ்சலி நிறுவனத்தின் 94 சதவீத பங்குகளை வைத்திருப்பவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா. 45 வயதாகும் இவர், பாபா ராம்தேவின் நெருங்கிய நண்பர் ஆவார்.

Image result for acharya balkrishna

1995-ம் இவர்கள் இருவரும் இணைந்து "திவ்யா யோகா பார்மசி" தொடங்கினார்கள், அதன் பின்புதான் கடந்த 2006-ம் ஆண்டுப் பதஞ்சலி நிறுவனத்தைத் தொடங்கினார்கள். இந்திய எஃப்எம்சிஜி சந்தையில் கிட்டத்தட்ட 400-கும் அதிகமான தயாரிப்புகளை விற்று வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக இருந்துள்ளது பதஞ்சலி நிறுவனம். கடந்த 2012-ம் ஆண்டுவரை 450 கோடி லாபம் ஈட்டிய நிறுவனம், 2015-2016-ம் ஆண்டில் 5000 கோடி எட்டியுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்தபிறகு இந்நிறுவனம் இந்திய அளவில் பெரும் பெயர்பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது சொத்துமதிப்பு 3,400 கோடி ரூபாய் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

Top