#scholarship detail: பள்ளி , கல்லூரி படிப்புகளுக்கு கல்வி உதவிதொகை பெற கைகொடுக்கும் வலைத்தளம்
  • 11:54AM May 17,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 11:54AM May 17,2019 Chennai

கல்லூரி படிப்பை தொடரும் பல ஏழை மாணவர்களுக்கும் உறுதுணையாக இருப்பது உதவித்தொகை தான் இவை அரசு மூலமாகவோ அல்லது தனியார் மூலமாகவோ கிடைக்க பெறுகிறது.இந்த scholarship பெறுவதிலும் பல சிக்கல்கள் நிலவுகிறது,அவற்றை களைய ஒருசில வலைதள பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அதில் கேட்கப்பட்டுள்ள தகுதி உடையவராக நீங்கள் இருப்பின் விண்ணப்பிக்கலாம்..இந்த பக்கங்களில் உதவி தொகை குறித்த தகவல் மட்டுமின்றி குறிப்பிட்ட துறை சார்ந்த போட்டிகள், ப்ராஜெக்ட் எக்ஸ்போ, பரிசுகள், நிபுணத்துவம் பெற்ற அறிஞர்களின் பேச்சுக்கள் போன்றவை அடிக்கடி அப்டேட் செய்யப்படுகிறது.அந்த தளங்கள் உங்களுக்காக,



#1. www.scholarshipinindia.com - மெடிக்கல்,தகவல் தொழில் நுட்பம் என அனைத்து வகையான படிப்புகளுக்கும் scholarship அளிக்கப்படுகிறது.அதுமட்டுமின்றி international scholarship வழங்கப்படுகிறது.

#2. www.scholarship-positions.com - post graduation,under graduation,Ph.d போன்ற படிப்புகளுக்கு உதவி தொகை பெற தகுதிகள் பட்டியலிடப்பட்டிருக்கும்.இதை தவிர்த்து வெளிநாட்டில் கல்வி பயில்வது குறித்தும் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கும். இதனையடுத்து மாணவர்களது கேள்வி,பதில்களும் இடம்பெற்றிருக்கும்.

#3. www.studyabroadfunding.com - முழுக்க முழுக்க வெளிநாட்டு கல்வி பயில்வோர்களுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.

#4. www.scholarshipnet.com - இளநிலை ,முதுநிலை ,ஆராய்ச்சி தொடர்பான உதவிதொகை பெற அனைத்து விவரங்களை கொண்டுள்ள தளம்.

#5. www.eastchance.com - இதில் உதவி தொகை குறித்த விபரங்கள் மட்டுமின்றி சுற்றுசூழல் , கோடைகால வகுப்புகள் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன..(#Molecular Medicine : எதிர்காலத்தில் அதிக வேலை வாய்ப்புகளை தேடி தரும் Molecular Medicine படிக்க அரிய வாய்ப்பு ! )

#scholarship detail:மேற்கண்ட தளங்களில் பார்வையிடும் போது,அதில் கேட்கப்பட்டுள்ள தகுதிகளை உடையவராக நீங்கள் இருந்தால் , உடனடியாக விண்ணப்பிக்கவும்.மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கவும்..

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top