Lushgreen

ஒரே ஒரு டாஸ்க் தான் ஆனால் மொத்த வீடும் குளோஸ்! நிரூப் மற்றும் அபிநய் சண்டையால் கொழுந்துவிட்டு எரியும் பிக் பாஸ் வீடு!

Nov 11 2021 10:17:00 AM

பிக் பாசில் இந்த வாரம் சண்டை மேல் சண்டையாக தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருக்கிறது. காரணம் நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் தான். இந்த டாஸ்க் நடந்தபோது கூட சண்டை பெரிதாக வரவில்லை. ஆனால் தற்போது தினசரி இதனால் ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.

bigg-boss-5 nirub-abinai-fight

நேற்று இசைவாணியிடம் பிக் பாஸ் இந்த விளையாட்டு குறித்து கேட்டபோது, நிரூப் ஐக்கியை கைப்பாவையாக பயன்படுத்துவது போல தோன்றுகிறது என்று இசைவாணி தெரிவித்துள்ளார். உடனடியாக கோபப்பட்ட நிரூப், அப்போது நீங்கள் என்ன அபிநயின் கைப்பாவையாக செயல்படுகிறீர்களா என திருப்பி கேள்வி கேட்டுள்ளார். சம்பந்தமே இல்லாமல் தன்னை எதற்கு உள்ளே இழுக்கிறார்கள் என்று சுதாரித்துக்கொண்ட அபிநய், நீங்கள் தான் ஜெயிப்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறீர்கள் என்று நிரூப் மீது குற்றம் சுமத்துகிறார். மொத்தத்தில் பிக் பாஸ் வீட்டில் சண்டை அதிகரித்துள்ளது.

bigg-boss-5 nirub-abinai-fight

ஏற்கனவே அக்சரா மற்றும் சிபி இடையில் வெடித்த சண்டை இன்னும் தீரவில்லை. இமான் அண்ணாச்சி மற்றும் இசைவாணிக்கு இடையில் எப்போது சண்டை வெடிக்கும் என்றே தெரியவில்லை. பவானி மற்றும் ராஜு இடையில் நிலவிவரும் பனிப்போரும் இன்னும் தீரவில்லை. இந்நிலையில் தற்போது அபிநய் மற்றும் நிரூப் இடையில் சண்டை வெடித்துள்ளது.

bigg-boss-5 nirub-abinai-fight

எங்கு பார்த்தாலும் சண்டை, யாரை பார்த்தாலும் கோபம் என்று தான் இந்த வாரம் நகர்ந்து கொண்டுள்ளது. கடந்தவாரம் கமல்ஹாசன் கூறியது போல கொளுத்திப்போட்ட பட்டாசுகள் தற்போது தான் ஒவ்வொன்றாக வெடிக்க துவங்கியுள்ளது. இது வெடித்துக்கொண்டே இருக்கும்பட்சத்தில் போட்டி இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. தீபாவளி முடிந்தபிறகு தான் பிக் பாஸ் வீட்டுக்குள் உண்மையான தீபாவளி தொடங்கியுள்ளது. ஏகப்பட்ட சண்டைகள் தொடர்ந்து வெடித்து வருவதால் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்று மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.