Exquisite

எல்லோரும் கூப்பிடுகிறோம் வாங்க தல! நீங்க இல்லாத விளையாட்டை கற்பனை கூட செய்ய முடியவில்லை! இவரு மட்டும் திரும்ப வந்தா எப்படி இருக்கும்?

May 29 2021 07:44:00 PM

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆபிரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ். இவரை சுருக்கமாக ABD என்று அழைக்கலாம். இவருக்கு பல செல்லப்பெயர்கள் உள்ளது. இவரை மிஸ்டர் 360 என்று கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அழைப்பார்கள். இவருக்கு இந்த பெயர் வருவதற்கு முக்கிய காரணம் இவருடைய பேட்டிங் ஸ்டைல் தான். மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் பந்துகளை சிதறடிக்க விடும் திறமை இவரிடம் மட்டுமே உள்ளது. 360 டிகிரி வரை சுழன்று சூறாவளி போல பந்துகளை சிக்சருக்கு விளாசுவார். இதன் காரணமாகவே இவருக்கு இந்த பெயர் வைக்கப்பட்டது.

ab-de-villiers

பல ஆண்டுகளாக தென்னாப்பிரிக்காவுக்காக மிகச்சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த டி வில்லியர்ஸ் கடந்த 2018ம் ஆண்டு திடீரென அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார். அதன் பிறகு .பி.எல் போன்ற உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். டி வில்லியர்ஸை பொறுத்தவரையில் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி விட்டாலும் இன்னமும் சற்றும் சளைக்காமல் அப்படியே முழுத்திறமையுடன் விளையாடி வருகிறார். பொதுவாக சர்வதேச போட்டியில் இருந்து ஒரு வீரர் ஓய்வு அறிவித்துவிட்டால் அதன் பிறகு அவருடைய பேட்டிங் திறமை சற்று குறைந்து விடும்.

ab-de-villiers

ஆனால் இவரது பேட்டிங்கை பார்த்தால் இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த வீரர் என்று ஒருவரும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு இப்போதும் களத்தில் இறங்கிவிட்டால் எதிரணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார் டி வில்லியர்ஸ். கிரிக்கெட்டில் அறிமுகமான ஆரம்பகாலத்தில் இவருடைய ஆட்டத்தை பார்ப்பவர்கள் விரைவில் இவர் அணியை விட்டு வெளியேற்றப்படுவார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் தன் மீதான விமர்சனங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி தரமான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்க அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவெடுத்தார்.

ab-de-villiers

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகிய டி வில்லியர்ஸ் பீல்டிங்கிலும் கெட்டிக்காரர். விக்கெட் கீப்பராக இருப்பவர்களை பீல்டிங் செய்யச்சொன்னால் அது சற்று சிரமமான காரியம். ஆனால் விக்கெட் கீப்பராக இருந்துகொண்டு பீல்டிங்கிலும் மிகச்சிறப்பான முறையில் செயல்படக்கூடியவர் தான் டி வில்லியர்ஸ். பல ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவிற்கு கேப்டன் பொறுப்பை வகித்தார். இவர் ஏகப்பட்ட சாதனைகளையும் படைத்துள்ளார். மைதானத்தில் இறங்கிவிட்டால் ரன்களை குவிப்பதில் வல்லவரான இவரது மிக முக்கியமான சாதனை 2015ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிவேக சதம் அடித்தது தான்.

ab-de-villiers

அந்த போட்டியில் அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்திய டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் சதமடித்து அதிவேக சதமடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார். இந்த சாதனை இன்று வரை யாராலும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது. டி வில்லியர்ஸ் மீண்டும் சர்வதேச போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அவர் தன்னுடைய ஓய்வு முடிவை மாற்றிக்கொண்டு இன்னும் சில வருடங்கள் சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாகவும் இருக்கிறது.